Homeபிற செய்திகள்சேலம் சுகவனேசுவரர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 7-ம் தேதி நடைபெறுகிறது

சேலம் சுகவனேசுவரர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 7-ம் தேதி நடைபெறுகிறது

சேலம் சுகவனேசுவரர் கோவிலில் திருப்பணிகள் நிறைவு பெற்று வரும் 7-ம் தேதி கும்பாபிஷேகம் நடை பெற இருக்கிறது.
சேலம் டவுன் பகு தியில் புராண கால சிறப்பு கொண்ட சுகவனேசுவரர் கோவில் உள்ளது. இக்கலியுகத்திலே சுகப்பிரும்மரிஷி வழிபட்ட தால் சுகவனம் எனவும் பெயர் பெற்றது. இது போன்ற மகிமை வாய்ந்த இத்தலத்திலே இறைவன் சுகவனேசுவரர் எனும் திருநாமத்தோடும், இறைவி சொர்ணாம்பிகை எனும் திருநாமத்தோடும் அருளாட்சி புரிந்து பக்க தர்களுக்கு வேண்டிய வரங் களை அருள்கின்றனர்.

இக்கோவில் கும்பா பிஷேக விழா குறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் அறங்காவலர்கள் குழு தலைவரான சோனா கல் விக் குழுமத்தின் தலைவர் வள்ளியப்பா கூறியதாவது:
சேலம் சுகவனேசுவரர் கோவில் கும்பாபிஷேக விழா வரும் 1-ம் தேதி தொடங்குகிறது. 2-ம்தேதி புண்யாஹாவாசனம், மகா கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற உள்ளன. 4-ம் தேதி, முதல் கால யாக பூஜை, 5-ம் தேதி இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாக பூஜை, சுவாமிக்கு அஷ்டபந்தனம் சாற்றுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும், 6-ம் தேதி, 4 மற்றும் 5-ம் கால யாக பூஜை, பூர்ணாஹுதி, தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. 7-ம் தேதி காலை 10.50 மணிக்கு, அனைத்து விமானங்கள் மற்றும் அனைத்து ராஜகோபுரங் களுக்கும் சமகால மகா கும்பாபிஷேகம் விமரிசை யாக நடத்தப்பட உள்ளது.

காலை 11.15 மணிக்கு சுகவனேஸ்வரர்-சொர் ணாம்பிகை அம்மனுக்கு மகா கும்பாபிஷேகம், மகா தீபாராதனை நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும்.மாலை 5 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலா நடைபெறும்.
இவ்வாறு வள்ளியப்பா கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img