fbpx
Homeபிற செய்திகள்கோவை கேஎம்சிஹெச்-ல் இந்தியாவில் முதலாவது உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை கருத்தரங்கு

கோவை கேஎம்சிஹெச்-ல் இந்தியாவில் முதலாவது உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை கருத்தரங்கு

இந்தியாவின் முதலாவது உறுப்புமாற்று அறுவை சிகிச்சை கருத்தரங்கு கேஎம்சிஹெச்-ல்நடை பெற்றது. உறுப்புமாற்று அறுவை சிகிச்சையைப் பொறுத்தவரை இந்தியாவில் கடந்த 30 ஆண் டுகளில் மிகப்பெரும் வளர்ச்சி ஏற் பட்டுள்ளது.

கேஎம்சிஹெச்-ல் இமேஜிங் அண்டு இண்டர்வென்ஷன் ஆர்கன் டிரான்ஸ்பிளான்டேஷன் (Imaging and Intervention Organ Transplantation) என்ற பெயரில் உறுப்புமாற்று அறுவை சிகிச்சை கருத்தரங்கு (ஆக.20) நடந்தது.
அதுசமயம் உறுப்புமாற்று அறுவை சிகிச்சைக்காக ஒரு புதிய சங்கமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதுபோன்ற சங்கம் உலகிலேயே வேறு எங்கும் இல்லை என்றும் இது மற்ற நாடுகளுக்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாகத் திகழும் என்று கருத்தரங்கு ஏற் பாட்டு செயலாளர் டாக்டர் வெங்கடேஷ் தெரிவித்தார்.
கேஎம்சிஹெச் பல்வேறு உறுப்பு மாற்று சிகிச்சைகளை வெற்றிகரமாகச் செய்துள்ளது. பல புதுமையான சிகிச்சை முறைகளுக்கு நாட்டிலேயே முன் னோடி மருத்துவமனைகளில் ஒன்றாகத்திகழ்கிறது.

டாக்டர் விவேக் பதக் தலைமையில் ஸ்ட்ராய்டு இல்லாத சிறுநீரக மாற்று அறுவை சிகிச் சையில் தலைசிறந்து விளங்குகிறது என்றார் கேஎம்சிஹெச் தலைவர் டாக்டர் நல்லா ஜி பழனிசாமி.


சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தவிர இருதயம், இரைப்பை, கல்லீரல், கணையம், எலும்பு மஜ்ஜை முதலான அனைத்துவித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை சேவை களையும் அளிக்கும் ஒரு சில மருத்துவமனைகளில் கேஎம் சிஹெச்-ம் ஒன்று என்று கேஎம்சி ஹெச் செயல் இயக்குனர் டாக்டர் அருண் பழனிசாமி தெரிவித்தார்.

கருத்தரங்கிற்கு சென்னை எம்.ஜி.எம். ஹெல்த்கேர் மருத்துவ மனையின் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை இயக்குனர் டாக்டர் கே.ஆர்.பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
இந்தியா முழுவதிலும் இருந்து 300-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கருத்தரங்கில் பங்கேற்றனர்.

உறுப்புமாற்று அறுவை சிகிச்சைக்கான புதிய சங்கத்தின் தலைவராக வேலூர் கிறிஸ்துவ மருத்துவக்கல்லூரி கதிரியக்கத் துறை பேராசிரியர் டாக்டர் ஷ்யாம்குமார் பொறுப்பு வகிப் பார். டாக்டர் வெங்கடேஷ் பொதுச் செயலாளராக பணியாற்றுவார். இவர்களது தலைமை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் இந்த சங்கம் உறுப்புமாற்று மருத்துவம் சார்ந்த கல்வியறிவு அளிக்கும் சங்கமாக செயல்படும்.

படிக்க வேண்டும்

spot_img