குடியரசு தினம் மற்றும் பாரதியார் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டிகள் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் சேலம் மாவட்டத்தைச் சார்ந்த 490 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட உடற்கல்வி கல்வி ஆய்வாளர், மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து செய்திருந்தனர்.