44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28-ஆம் தேதி மாமல்லபுரத்தில் துவங்குகிறது. இது தொடர்பாக, தமிழக அரசு சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
கோவை மாவட்டத்திலும் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் கோவை மாவட்ட சைக்கிளிங் அசோசியேசன் சார்பாக விழிப் புணர்வு பயணத்தை ஆட் சியர் சமீரன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
இந்த விழிப்புணர்வில் மாநகர காவல் ஆணையாளர் வி.பாலகிருஷ்ணன் இளைஞர்களுடன் சைக்கிளில் சென்றார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் ரவிச் சந்திரன், கலந்து கொண்டார்



