Homeதலையங்கம்சுதந்திர இந்தியாவில் முதன் முறையாக...!

சுதந்திர இந்தியாவில் முதன் முறையாக…!

5.22 லட்சம் ஏக்கர் பயன்பெறும் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை திறக்கப்பட்டது. முதலமைச்சர் ஸ்டாலினால் காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள விவசாய பெருமக்களின் குறுவை சாகுபடிக்காக மே மாதமே நீர் திறந்து விடப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டது.

தற்போது காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு அதிக நீர்வரத்து உள்ளது. 24ம் தேதி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்ட அளவு 117.760 அடியாகவும், நீர் இருப்பு 89.942 டிஎம்சியாகவும் உள்ளது. அதிக நீர்வரத்து தொடர்வதால், மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை விரைவில் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறுவை சாகுபடிக்கு வழக்கமாக திறக்கப்படும் நாளான ஜூன் 12ம் தேதிக்கு முன்னதாக மேட்டூர் அணை நீரை முதலமைச்சர் திறந்து வைத்துள்ளார்.

மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்டு இதுவரை 88 ஆண்டுகளில் 1936, 1937, 1938, 1940, 1941, 1942. 1943, 1944, 1945, 1946, 1947 ஆகிய ஆண்டுகளில் ஜுன் 12ம் தேதிக்கு முன்பாக அணை திறக்கப்பட்டுள்ளது. இதே போல் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட 2011ம் ஆண்டில் ஜூன் 12ம் தேதிக்கு முன்பாகவே அணை திறக்கப்பட்டுள்ளது.

இதில் மே மாதத்தை பொறுத்த வரை 1947ம் ஆண்டில் மட்டுமே அணை திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதாவது நாடு சுதந்திரம் அடைந்த பிறகு முதல்முறையாக மேட்டூர் அணையில் இருந்து மே மாதம் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டிருப்பது விவசாயிகளை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
முதல்வர் ஸ்டாலினுக்குப் பாராட்டுக்கள்!

படிக்க வேண்டும்

spot_img