fbpx
Homeபிற செய்திகள்சுதந்திரப் போராட்ட வீரர்கள் கண்காட்சி: விருதுநகர் ஆட்சியர் துவக்கினார்

சுதந்திரப் போராட்ட வீரர்கள் கண்காட்சி: விருதுநகர் ஆட்சியர் துவக்கினார்

விருதுநகர் மாவட்டம், கே.வி.எஸ். ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2-ம் தேதி மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் மூலமாக ஏற்பாடு செய்யப்பட்ட, அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் குறித்த 3 – நாள் புகைப்படக்கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாத ரெட்டி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். பின்னர் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது:

நாட்டின் சுதந்திரத்திற்காக ஒவ்வொரு மாநிலத்திலும், அந்தந்த மாநிலங்களில் ஒவ்வொரு ஊர்களிலும், பாடுபட்ட பல்வேறு அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் இருந்தனர். அவர்கள் அனைவரின் முயற்சியின் காரணமாகவே விடு தலை சாத்தியமானது.

தொழில், சொத்துக்கள், வருவாய் உள்ளிட்ட பலவற்றில் நாட்டிற்காக தியாகம் செய்தவர்கள் பலர் இருந்தனர். அவர்களைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய கடமை இருக்கிறது.

இதை நிறைவேற்றவே மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் இத்தகைய புகைப் படக்கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறது. வேலு நாச்சியார் 1947-ம் ஆண்டு பல்வேறு இன்னல்களுக்கு பிறகு நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்தது.

ஆனால், அதற்கு 200 ஆண்டுகளுக்கு முன்னதாகவே, ஒரு மாபெரும் படையைத் திரட்டி, பிரிட்டீஷாரின் நிம்மதியை கெடுத்த பெருமை வேலு நாச்சியாரையே சேரும். அதற்கும் 50 ஆண்டுகள் முன்னதாகவே, வேலூரில் ஆங்கிலேயர்களை எதிர்த்து சிப்பாய் கலகம் நடைபெற்றதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சி. போன்ற பல சுதந்திர போராட்ட வீரர்களின் முயற்சியால் இந்தியா விடுதலைப் பெற்றது. இத்தகைய தியாகிகள் குறித்து இன்றைய மாணவ, மாணவிகள் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு இன்ன பிற காரணங்களைவிட, மிக முக்கியமானது ஒற்றுமை. இலங்கை போன்ற நாடுகளின் வீழ்ச்சி ஒற்றுமையின்மைக்கு உதாரணம்.

நாட்டிற்காக போராடிய சுதந்திர போராட்ட வீரர்களில் விருதுநகர் மண்ணிலிருந்து ஏராளமான தியாகி களும் இருக்கின்றனர். இந்த மண்ணில் மத்திய மக்கள் தொடர்பகம் ஏற்பாடு செய்துள்ள புகைப்படக் கண்காட்சி அவர்களைப் பற்றி அறிய ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. கண் காட்சியை அனைவரும் கண்டு பயன டைய வேண்டும் என்றார் ஆட்சியர்.

கண்காட்சியையொட்டி நடத்தப்பட்ட பேச்சுப்போட்டி, ஆரோக்கியமான குழந்தைகள் மற்றும் பாரம்பரிய உணவுகள் குறித்து நடை பெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

தொழில்கடன், கல்விக்கடன், சுய உதவிக்குழுக் கடன்களுக்கான காசோலைகளை மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
இக்கண்காட்சி, நேற்று (நவ.4) வரை நடைபெறுகிறது.

விருதுநகர் சமுகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம்;, விருதுநகர் மாவட்டத்தின் முன்னோடி வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி. விருதுநகரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் மூலமாக கண்காட்சியில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்ச்சியில், சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குனர் எம்.அண்ணாதுரை, மத்திய மக்கள் தொடர்பகத்தின் இயக்குனர் ஜெ.காமராஜ், ஊரக சுய வேலைவாய்ப்பு வளர்ச்சி மையத்தினுடைய இயக்குநர் தங்கலெட்சுமி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் இராஜம், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பாண்டிசெல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img