fbpx
Homeபிற செய்திகள்சிறுவனுக்கு தாடை மூட்டு பிணைப்பு அறுவை சிகிச்சை: சவீதா பல் மருத்துவக் கல்லூரியில் டாக்டர்கள் சாதனை

சிறுவனுக்கு தாடை மூட்டு பிணைப்பு அறுவை சிகிச்சை: சவீதா பல் மருத்துவக் கல்லூரியில் டாக்டர்கள் சாதனை

வாயை திறக்க முடியாமல் அவதிப்பட்ட 4 வயது சிறுவனுக்கு தாடை மூட்டு பிணைப்பு அறுவை சிகிச்சையை சவீதா பல் மருத்துவக் கல்லூரி டாக்டர்கள் வெற்றிகரமாக செய்தனர்.

தாடை மூட்டு மற்றும் அதனைச் சுற்றியுள்ள தசைகளில் வலி காரணமாக பீகாரைச் சேர்ந்த 4 வயது சிறுவன் சவீதா மருத்துவ கல்லூரியின் வாய் மற்றும் தாடை அறுவை சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டான்.

அவன் 18 மாத குழந்தையாக இருக்கும் போது படிக்கட்டில் இருந்து கீழே விழுந்ததன் காரணமாக, அவனால் வாயை பெரிதாக திறக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தான்.

இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் வரை அவனது வாயை அவனால் 5 மி.மீ.
அளவு மட்டுமே திறக்க முடியும். இந்த நிலையில் அவனது பெற்றோர் பீகாரில் உள்ள மருத்துவமனை ஒன்றுக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு டாக்டர்கள் அவனுக்கு தாடை மூட்டு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர்.ஆனால், பைபர்-ஆப்டிக் இன்டூபேஷன் தொழில்நுட்ப வசதி அங்கு இல்லாத காரணத்தால், அவனுக்கு அங்கு அறுவை சிகிச்சை செய்ய முடியவில்லை.

இந்நிலையில் அவனை சென்னையில் உள்ள சவீதா பல் மருத்துவக் கல்லூரி டாக்டர் முருகேசனிடம் அழைத்துச் செல்லுமாறு அம்மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்திருந்தனர்.

அந்த சிறுவனுக்கு இடது தாடை மூட்டில் பிரச்சினை இருப்பது கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்த சிறுவனுக்கு கோஸ்டோ காண்ட்ரல் கிராப்ட் என்னும் கடினமான திசு குறைபாடுகளை சீரமைப்பதற்கும், கீழ் தாடையின் எலும்பு மூட்டு உருவாக்கத்திற்குமான சிகிச்சை மேற்கொள்ளப் பட்டு அவனது தாடை மூட்டுகள் சீரமைக்கப் பட்டன.

இந்த அறுவை சிகிச்சைக்கு முன்பு 5 மி.மீ. மட்டுமே திறந்த அவனது வாய் தற்போது எல்லோரையும் போல 30 மி.மீ. வரை திறக்க முடிகிறது.இவ்வாறு மருத்துவ மனை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img