fbpx
Homeபிற செய்திகள்சிறப்பு தொழில் கடன் முகாம் : கோவையில் இன்று துவக்கம்

சிறப்பு தொழில் கடன் முகாம் : கோவையில் இன்று துவக்கம்

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் சார்பில் குறு சிறு மற்றும் நடுத்தர(MSME) தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் விழா இன்று (ஆக.17) முதல் செப்டம்பர் 2-ம் தேதி வரை நடைபெறுகிறது.

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மாநில அளவில் செயல் பட்டு வரும் ஒரு தமிழ் நாடு அரசு நிதிக் கழகம் ஆகும்.

1949-ம் ஆண்டு துவங்கப்பெற்ற இக்கழகம் மாநில அரசின் ஆதரவுடன் இதுவரை எண்ணற்ற தொழிற்சாலைகளுக்கு கடனுதவி வழங்கி தொழில் வளர்ச்சிக்கு முன்னோடியாக திகழ்கிறது.

இக்கழகம் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும் தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் பிரிவுகளை விரிவுபடுத்துவதற்கும் உற்பத்தியை பன்முகப்படுத்துவதற்கும் பல்வேறு சிறப்பு திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கி வருகிறது.

கோவை மற்றும் குறிச்சி கிளை அலுவலகங்களில் (முகவரி: கோவை கிளை- யுனை டெட் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், முதல் மாடி, 94, டாக்டர் நஞ்சப்பா ரோடு கோவை-641018.

குறிச்சி கிளை- பிளாட் எண்.91, முதல் மாடி, கொசிமா காம்ப்ளக்ஸ், சிட்கோ இன்டஸ்ட்ரியல் எஸ்டேட் (மேற்கு), குறிச்சி, கோவை-641021) குறு சிறு மற்றும் நடுத்தர (MSME) தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் விழா 17.08.2022 முதல் 02.09.2022 வரை நடைபெறுகிறது.

இச்சிறப்பு தொழில் கடன் விழாவில் டி.ஐ.ஐ.சி.யின் சிறப்பு தொழில் திட்டங்கள் புதிய தொழில் முனைவோர் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (NEEDS) மற்றும் மத்திய, மாநில அரசுகளின் மூலதன மானிய திட்டங்கள் குறித்து விரிவான விளக்கங்கள் அளிக்கப்படுகின்றன.

தகுதி வாய்ந்த தொழில்களுக்கு தமிழக அரசின் 25% முதலீட்டு மானியம் ரூ.150 இலட்சம் வரை விரைந்து பெற்று தர ஆவண செய்யப்படு கிறது.
இந்த விழாவில் சமர்ப்பிக்கப்படும் பொது கடன் விண்ணப் பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50% சலுகை அளிக்கப்படும்.

இந்த பொன்னான அரிய வாய்ப்பினை பயன்படுத்தி புதிய தொழில் முனைவோர், தொழிலதிபர்கள் தங்கள் தொழில் திட்டங்களுடன் மேற்கண்ட அலுவலகங்களுக்கு வருகை தந்து தொழில் கடன் மற்றும் மத்திய மாநில அரசுகளின் மானிய சேவைகளை பயன்படுத்தி கொள்ள லாம்.

மேலும் தகவல் களுக்கு: 94443 96841 94450 23471 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு அறியலாம். இத்தகவலை கோ வை மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img