fbpx
Homeபிற செய்திகள்கோவை ஸ்ரீராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி முதல்வருக்கு சாதனையாளர் விருது

கோவை ஸ்ரீராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி முதல்வருக்கு சாதனையாளர் விருது

கோவை ஸ்ரீராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி செயலாளரும் முதல்வருமான பி.எல்.சிவக்குமார் அவர்களுக்கு அவரின் 25 ஆண்டு கல்வி பணியை பாராட்டி சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

நீலகிரி மாவட்ட  அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம்,தலைமை செயலக அனைத்து பத்திரிக்கையாளர்சங்கம்,ஷ்யாம்நியூஸ் இணைந்து நடத்திய முப்பெரும் விழா உதகையில் நடைபெற்றது.


உள்ளாட்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு வரவேற்பு, நிர்வாகிகளுக்கு அடையாள அட்டை வழங்குதல்,நலத்திட்ட உதவிகள் வழங்குதல் என நடைபெற்ற விழாவிற்கு அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழக துணை தலைவர் தமிழ்வெங்கடேசன் தலைமை வகித்தார்.
கௌரவ தலைவர்கள்ஜாம்பவான் ஜெரால்ட், உலிகல்சண்முகம்,தினேஷ்,ராஜா சரவணன் மாவட்ட பொருப்பபாளர் சரவணன்,செயலாளர்  நவாஸ் ஆகியோர் முன்னிலை  வகித்தனர்.

கோவை ஸ்ரீராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி செயலாளரும் முதல்வருமான பி.எல்.சிவக்குமார் ,சி.எஸ்.ஐ. ஆர் அமைப்பின் புற்றுநோய் விஞ்ஞானி முனைவர் கார்த்திகேயன்,நீலகிரி மாவட்ட திமுக துணை செயலாளரும் நகராட்சி துணை தலைவருமான ஜெ.ரவிக்குமார், உதகை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் மாயன், நகரமன்ற உறுப்பினர்& திமுக நகர செயலாளருமானஜார்ஜ்,நகராட்சி தலைவர் வாணிஸ்வரி,நகர மன்ற உறுப்பினர் கே.ஏ. முஸ்தபா ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.

கோவை ஸ்ரீராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி செயலாளரும் முதல்வருமான பி.எல்.சிவக்குமார் அவர்களுக்கு அவரின் 25 ஆண்டு கல்வி பணியை பாராட்டியும்,கோவை ஸ்ரீராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி சார்பில் பல்வேறு ஆதிவாசி கிராமங்களில் நாட்டுநலப்பணிகள் மூலம் செய்யப்பட்ட சிறப்பான மக்கள் நலப்பணிகளை பாராட்டி சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. 


நிகழ்சியில் சிறப்பு சாதனையாளர்கள் விருதுகளாக கோவை ஸ்ரீராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி செயலாளரும் முதல்வருமான பி.எல்.சிவக்குமார் ,நீலகிரி மாவட்ட திமுக துணை செயலாளரும் நகராட்சி துணை தலைவருமான ஜெ.ரவிக்குமார்,உதகை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் மாயன், நகரமன்ற உறுப்பினர்& திமுக நகர செயலாளருமானஜார்ஜ்,எடப்பள்ளி பகுதியை சேர்ந்த திமுக பிரமுகரும்  சமுக சேவகருமான காளிதாஸ் ஆகியோர் விருது பெற்றனர்.


இதில் உள்ளாட்சி தலைவர்கள்,உதகமண்டலம் நகராட்சி தலைவர் வாணிஸ்வரி,குன்னூர்  நகராட்சி தலைவர் ஷீலாகேத்தரின்,  மேட்டுபாளையம்  நகராட்சி தலைவர்  மெஹரிபாபர்வின்,கூடலூர்  நகராட்சி தலைவர் பரிமளா,நெல்லியாளம்  நகராட்சி  தலைவர்  சிவகாமி,  ஆகியோர் பாராட்டு பெற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img