Homeபிற செய்திகள்கோவை வடக்கு தனி வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா பெற அழைப்பு

கோவை வடக்கு தனி வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா பெற அழைப்பு

கோவை மாவட்டம், கோவை வடக்கு நகர நில வரித் திட்டம், கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கிரையம்/பூர்வீகம் மூலம் பாத்தியப்பட்ட வீடுகள்/ மனைகள்/விவசாய நிலங்களுக்கான பட்டா கோவை வடக்கு தனி வட்டாட்சியர், நகர நில வரித் திட்ட அலுவலகத்தில் வழங்கப்பட்டு வருகிறது.
பட்டா என்பது ஒருவித உரிமையை நிர்ணயிக்கும் ஒரு வருவாய்த்துறை ஆவணமாகும்.

எனவே சொத்துக்குரிய ஆவ ணங்களை ஆஜர்படுத்தி பட்டா பெறுவதன் மூலம் வரு வாய்த்துறை ஆவணங்களில் இன்றைய தேதியில் சொத் துக்குரிய நபரின் பெயர் பதிவு வங்கிக்கடன், மாநகராட்சி சொத்து வரி பெயர் மாற் றம்/கிரையம் மற்றும் பாகப்பி ரிவினை போன்ற ஆவண பதிவுகள் செய்து கொள்ளலாம்.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு எண் 0(15)-க்கு உட்பட்ட பிளாக் 1 முதல் 40 வரையிலான பகுதிகளைச் சேர்ந்த அம்பேத்கார் வீதி, தடாகம் ரோடு, தியாகி குமரன் வீதி, மாரியம்மன் கோவில் வீதி, சுந்தரம் வீதி, கோகுலம் காலனி மெயின் ரோடு, சாஸ்திரி வீதி, மருதமலை ரோடு, இளங்கோவன் வீதி, கோகுலம் காலனி வீதி, பெரியார் இராமசாமி வீதி, தொண்டாமுத்தூர் ரோடு, தெலுங்குபாளையம், கைத் தறி குமாஸ்தா காலனி, திரு நாவுக்கரசு வீதி, பாரதிதாசன் வீதி, இந்திரா நகர், திலகர் வீதி, கௌலி பிரவுன் ரோடு, நேதாஜி வீதி, பார்த்தசாரதி வீதி, நாயுடு வீதி, வி.கே.நாயுடு வீதி பொது மக்களுக்கு ஏற்கனவே பட்டா விசாரணைக்கான நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

விசாரணைக்கான நோட் டீஸ் பெற்று இவ்வலுவலகத்தில் ஆவணங்களுடன் ஆஜர் ஆகாத பட்டாதாரர்கள், இவ்வ லுவலகத்தில் இருந்து ஏற்கனவே வழங்கப்பட்ட நோட்டீஸ் நகலுடன் கீழ்க்கண்ட அசல் மற்றும் ஒளி (Xerox Copy) கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கோவை வடக்கு நகர நிலவரித் திட்ட தனி வட்டாட்சியர் அலு வலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும்.

இது நகர நிலவரித் திட்டத்தின் கீழ் பட்டா பெற் றுக் கொள்வதற்கான இறுதி வாய்ப்பாகும்.

கிரையப் பத்திரம் அசல் மற்றும் நகல், மூலப்பத்திரம் அசல் மற்றும் நகல், கிரை யப்பத்திரம் அசல் பிரதி வங் கியில் இருப்பின் வங்கிக் கடிதம், சொத்துவரி, வீட்டு வரி ரசீது, மின் கட்டண அட்டை நகல், தண்ணீர் வரி ரசீது நகல், வாரிசுதாரராக இருப்பின் இறப்பு சான்று, வாரிசு சான்று, நீதிமன்ற ஆணைகளிருப்பின் அவற்றின் அசல்/நகல், பத்திர தேதியில் இருந்து நாளது வரை வில்லங்க சான்று நகல், ஆதார் அட்டை/வாக்காளர் அடையாள அட்டை ஆகிய மேற்கண்ட ஆவணங்களை 15 தினங்களுக்குள் சமர்ப் பித்து பட்டா பெற்றுக் கொள்ளாவிடில், நகரளவை பதிவேட்டில் உள்ளவாறு பெயர் தாக்கல் செய்து உத்தர விடப்படும்.
இத்தகவலை மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீ ரன் தெரிவித்துள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img