fbpx
Homeபிற செய்திகள்கோவை மாவட்ட பள்ளி கல்லூரிகளில் போதைப்பொருளுக்கு எதிரான சங்கங்கள்- கோவை கலெக்டர் தகவல்

கோவை மாவட்ட பள்ளி கல்லூரிகளில் போதைப்பொருளுக்கு எதிரான சங்கங்கள்- கோவை கலெக்டர் தகவல்

தமிழகத்தில் போதை பொருளை முழுமையாக ஒழிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இளம் தலைமுறையினர் போதை பழக்கத்தில் சிக்காமல் இருக்கவும், சிக்கியவர்களை அந்த பழக்கங்களில் இருந்து மீட்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் நேற்று போதைபொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை முதலமைச்சர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். அனைத்து மாவட்டங்களிலும் போதைபொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவையில் நேற்று நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் கல்லூரியிலும் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர், மாநகர காவல் ஆணையர் மற்றும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஒன்றிணைந்து போதைப்பொருளுக்கு எதிரான உறுதிமொழியேற்றனர்.

இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து கலெக்டர் சமீரன் நிரூபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளிலும் போதைப்பொருளுக்கு எதிரான உறுதிமொழி முதலமைச்சர் தலைமையில் எடுத்துள்ளார்கள்.

கோவையில் நானும் காவல் ஆணையரும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் முன்பு உறுதி மொழி எடுத்துள்ளோம்.

போதைப்பொருட்களால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட ஒருங்கிணைப்பு மையம் ஆரம்பித்துள்ளோம். ஒவ்வொரு பள்ளி கல்லூரிகளில் போதைப்பொருளுக்கு எதிரான கிளப்புகளை தொடங்க உள்ளோம்.

என்.சி.சி மற்றும் என்.எஸ்.எஸ் மாணவர்களை ஒருங்கிணைத்து இந்த் கிளப் செயல்படும். தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விநியோகத்தை தடுக்க கடந்தாண்டு உணவு பாதுகாப்புத்துறை மூலம் 478 கடைகளை ஆய்வு செய்து ரூ.24 லட்சம் அபராதம் விதித்துள்ளோம்.

இந்தாண்டு ஜூலை வரை ரூ.13 லட்சம் அபராதம் வித்திதுள்ளோம். கோவை மாவட்டத்தை பொறுத்தவரை போதைப்பொருளுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகள் இருக்கும்.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறியதாவது: போதை பொருளை அறவே ஒழிக்க மாவட்ட நிர்வாகம், காவல்துறை இணைந்து செயல்படுகிறது. கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை முழுமையாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படுள்ளது.

கஞ்சா விற்பனை மற்றும் சப்ளை தொடர்பாக விசாரிக்க இரண்டு சிறப்பு படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சிறப்பு படைகள் பல்வேறு மாநிலங்களில் விசாரிக்கின்றனர்.

கடந்த 15 நாட்களில் 20 கிலோவுக்கு மேற்பட்ட கஞ்சா கோவையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பள்ளி கல்லூரிகளுக்கு அருகே புகையிலை பொருட்களை விற்பனை செய்த 76 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு 712 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img