fbpx
Homeபிற செய்திகள்கோவை பள்ளி மாணவிக்கு ஐஓசி கல்வி உதவித்தொகை

கோவை பள்ளி மாணவிக்கு ஐஓசி கல்வி உதவித்தொகை

இந்தியன்ஆயில் நிறுவனம் (ஐஓசி) சார்பில், மாணவிகளுக்கான கல்வி உதவித் தொகை, கோவை அரசுப் பள்ளி மாணவிக்கு வழங்கப்பட்டது.

அரசுப் பள்ளிகளில்,10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக அளவில் மதிப்பெண் பெற்ற கோவையை சேர்ந்த மாணவிக்கு தலா ரூ.10,000 ஒரு முறை ஸ்காலர்ஷிப்-க்கான காசோலைகளை, காணொலிக் காட்சி வாயிலாக நடத்திய நிகழ்வில், இந்தியன்ஆயில் நிறுவனத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான செயல் இயக்குநர் மற்றும் மாநில தலைவர் பி. ஜெயதேவன் வழங்கினார்.

இந்தியன்ஆயில் நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீகாந்த் மாதவ் வைத்யா, இந்தியன்ஆயில் செயல் இயக்குநர் (மண்டல சேவைகள்) – தென் மண்டலம் கே. சைலேந்த்ரா, புழல் மத்திய சிறைச்சாலையின் காவல்துறை துணைத் தலைவர் (சிறைகள்) முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

75-வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தை ஒட்டி, இந்தியன்ஆயில் நிறுவனம், 2021-ம் ஆண்டில், ஒவ்வொரு மாநிலத்திலும், போர்டு தேர்வுகளில் அரசுப் பள்ளிகளில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று, அதிக அளவில் மதிப்பெண் பெற்ற 10-ம் வகுப்பு சார்ந்த 75 மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை (ஸ்காலர்ஷிப்) வழங்கி வருகிறது.

சுதந்திர தினக் கொண்டாட்ட தருணத்தில், நாடெங்கிலும் உள்ள மாணவிகளுக்கு மொத்த கல்வி உதவித்தொகையாக ரூ. 2.5 கோடி வழங்கப்ப டுகிறது.

விழாவில், கோவை மாவட்டம், அன்னூர், கே.ஜி. அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி எம்.வேணி, நீலகிரி, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த மாணவிகளுக்கு இந்த ஸ்காலர்ஷிப்புகள் வழங்கப்பட்டன.

சிறைச் சாலையில் உள்ளவர்கள், தங்கள் வாழ்வை நல்லமுறையில் சீரமைத்துக் கொள்ள உறுதுணை புரியும் வகையில், சிறைவாசிகளுக்கு குறிப்பிட்ட சில விளை யாட்டுகளில் பயிற்சி அளிக்க, இந்தியன்ஆயில் நிறுவனம் நாடெங்கிலும் உள்ள சில தேர்ந்தெடுக்கப்பட்ட சிறைச்சாலைகளில் பரிவர்த் தன் என்கிற முன்முயற்சியை அறிமுகம் செய்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக கோவை உட்பட தமிழகத்தில் உள்ள ஒவவொரு மாவட் டத்திலும் உள்ள அனைத்து முக்கிய சிறைச் சாலைகளில் இந்த திட்டம் நடைமுறைபடுத்தப்படும்.

இந்தியாவில் உள்ள சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளுக்கு பேட் மிண்ட்டன், கைப்பந்து, செஸ், டென்னிஸ் மற்றும் கேரம் ஆகிய விளையாட்டுகளில் பயிற்சி அளிக்கப்படும்.

நான்கு வார கால பயிற்சியின் போது,129 சிறைக்கைதிகளுக்கு, மனமகிழ்ச் சிக்கு என்பதோடு மட்டுமல்லாமல், உள்ளூர் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க ஏதுவாகவும் விளை யாட்டுகளின் அடிப் படை அம்சங்களும் நுணுக் கங்களும் கற்றுத் தரப்படும்.

இந்த கற்றல் முயற்சிகளின் மூலமாக, பங்கேற்பவர்களின் தன் னம்பிக்கையும் சுய கம்பீரமும் மேம்படும் என்பதில் ஐயமில்லை. இந்த பயிற்சி நிகழ்வில் கலந்து கொள்பவர்களுக்கு உரிய விளையாட்டு உபகரணங்களையும் சாத னங்களும் இந்தியன்ஆயில் நிறுவனம் வழங்கும்.

படிக்க வேண்டும்

spot_img