Homeபிற செய்திகள்கோவை சிறைச்சாலை மைதானத்தில் நாளை அரசுப் பொருட்காட்சி: அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, சாமிநாதன் துவக்கி வைக்கின்றனர்

கோவை சிறைச்சாலை மைதானத்தில் நாளை அரசுப் பொருட்காட்சி: அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, சாமிநாதன் துவக்கி வைக்கின்றனர்

கோவை சிறைச்சாலை அணி வகுப்பு மைதானத்தில் நாளை (ஜூன் 11) அரசு பொருட்காட் சியை அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, மு.பெ.சாமிநா தன் ஆகியோர் துவக்கி வைக்கின்றனர்.

அரசு பொருட்காட்சி நடைபெற உள்ள மைதானத்தில் அரசுத் துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டு வரும் பல்வேறு அரங்குகளை மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீ ரன் பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டார்.

ஆய்வின்போது மாநகராட்சி ஆணையாளர் எம்.பிரதாப் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில், கோவை மாவட்டத்தில் அரசின் திட்டங் கள் மற்றும் சாதனைகள் விளக்கும் வகையிலான அனைத்து துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெறும்வகையில் அரசுப் பொருட்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.

பொருட்காட்சியை நாளை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச் சர் ஏ.செந்தில்பாலாஜி, செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமி நாதன் ஆகியோர் துவக்கி வைக்க உள்ளனர்.

இப்பொருட்காட்சியில் செய்தி – மக்கள் தொடர்புத்துறை, சுற்றுலாத்துறை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வனத்துறை, வேளாண்மைத்துறை, காவல் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, கூட்டுறவுத் துறை, வருவாய் துறை, சமூக நலத்துறை, தோட்டக்கலைத்துறை, பொதுப்பணித் துறை, இந்து சமய அறநிலையத் துறை, பள்ளிக் கல்வித் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை, கைத்தறி மற்றும் கதர் கிராமத் தொழில் துறை, நெடுஞ்சாலைத் துறை, போக்குவரத்துத் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம் பாட்டுத் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, மீன் வளத்துறை ஆகிய 27 அரசுத் துறைகளுக்கு தங்கள் துறையின் மூலம் செயல்படுத்தப்படுத்தப்பட் டுவரும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் பார்த்து பயன் பெறும் வண்ணம் அரங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

கோவை மாநகராட்சி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், ஆவின், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் ஆகிய அரசு சார்பு நிறுவனங்களுக்கும் இப்பொருட் காட்சியில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

அனைத்து அரசு துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட் டங்களை பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் வகையிலும், தங்கள் துறையால் மேற்கொள் ளப்பட்ட சாதனைகள் மற் றும் செயல்படுத்தப்படும் திட் டங்களை காட்சிப்படுத்தும் வகையிலும் சிறப்பாக அரங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இப்பணிகளை மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, ஆலோசனை வழங்கினார்.

பொழுதுபோக்கு அம்சத் துடன் துவங்கப்பட உள்ள அரசு பொருட்காட்சியில் பொதுமக்கள் கலந்து கொண்டு அரசின் திட்டங்களை அறிந்து கொண்டு பயன் பெறலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img