Homeபிற செய்திகள்கோவை கிருஷ்ணம்மாள் கல்லூரியில் உயிர்தொழில் நுட்ப தொழில்துறை ஆராய்ச்சி உதவி கவுன்சில் திறப்பு விழா

கோவை கிருஷ்ணம்மாள் கல்லூரியில் உயிர்தொழில் நுட்ப தொழில்துறை ஆராய்ச்சி உதவி கவுன்சில் திறப்பு விழா

கோவை பூசாகோஅர கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் உயிர்தொழில்நுட்ப தொழில்துறை ஆராய்ச்சி உதவி கவுன்சிலின் திறப்பு விழா மற்றும் மாண வியர் மன்றத்தின் பிரிவு உபச்சார விழா இன்று கல்லூரி வளாகத்தில் நடைபெற் றது.

இதுகுறித்து கல்லூரியின் அறங்கா வலர் டாக்டர் ஆர்.நந்தினி கூறியதாவது: பைராக் நிறுவனம் இ&யுவா மையத்தையும் திறப்பதன் மூலம் ரூ.266.5 லட்சம் மானியத்துடன் அதன் புதுமையான ஆராய்ச்சியை மேற்கொள்ள மாணவிகளை ஊக்குவிக்கிறது.

பூசாகோஅர கிருஷ் ணம்மாள் மகளிர் கல்லூரிதான் இந்தியா வில் பைராக்&ல் ஆதரிக்கப்படும் ஒரே பெண்கள் நிறுவனம். இம்மையத்தின் செயல்பாடானது பயன்பாட்டு ஆராய்ச்சி கலாச்சாரத்துடன் மாண வர்களை ஊக்குவிப்பது, வளர்ப்பது மற்றும் மேம்படுத்துவதாகும்.

மேலும், சமூகத்தின் தேவைகளை நிவர்த்தி செய்யும் விதமாக தீர்வுகளை உரு வாக்க இளம் மாணவர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களிடையே தேவை சார்ந்த கண்டுபிடிப்புத் திறன்களை மேம் படுத்துவதாகும்.

எம் கல்லூரியுடனான இ&யுவா மையம் பைராக் தொழில்துறை இணைப்பு, தயாரிப்பு மேம்பாடு, வணிகமயமாக்கல், ஐபி உருவாக்கம் மற்றும் நிறுவனத்திற்கான கண்டுபிடிப்புகள் மூலம் அவர்களின் தொழில் முனைவோர் திறன்களை அதிகரிக்க, இளங்கலைப் பட்டதாரி மற்றும் முதுகலைப் பட்டதாரிகளுக்கு முன்-இன்குபேஷன் வசதியை வழங்கு கிறது.

இந்த மையமானது அதிநவீன வசதிகள் மற்றும் உயர்தரக் கருவிகளுடன் கூடிய அனைத்துத் துறைகளிலும் உள்ள உள் ஆய்வகங்களுக்கான அணுகலைக் கொண்டுள்ளது. மேற்கண்டவாறு அவர் கூறினார்.

முன்னதாக நடைபெற்ற விழாவிற்கு ஜி.ஆர்.ஜி கல்வி நிறுவனத்தின் நிறுவ னரும், அறங்காவலருமான டாக்டர் எஸ்.நிர்மலா ஆண்டறிக்கை வாசித்தார்.
அதை தொடர்ந்து பைராக் மையத்தை கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் கர்னல் பேராசிரியர் டாக்டர் பி.காளிராஜ் திறந்து வைத்து கல் லூரியின் ஆண்டு மலரை வெளியிட்டு பேசினார்.

அப்போது அவர் கூறும்போது, பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி பெண்களுக்கு நல்ல தரமான கல்வியை வழங்கி வருகிறது.

தரவரிசை பட்டியலில் அகில இந்திய அளவில் 6-வது இடத்தையும், தமிழ்நாடு அளவில் முதலாவது இடத்தையும் பெற்றுள்ளது பாராட்டத்தக்கது. வரவேற்கத்தக்கது, என்றார்.

விழாவில் கல்லூரி செயலாளர் டாக்டர் யசோதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img