கோவையில் எலைட் டாஸ்மாக்கில் வாங்கிய உயர் ரக மதுபானத்தில் விஷப்பூச்சிகள் செத்து மிதந்த சம்பவம் மது பிரியர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
தமிழகத்தில் சாதாரண டாஸ்மாக் கடைகள் தவிர எலைட் என்ற பெயரில் மதுபான கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உயர் ரக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்நிலையில் கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள எலைட் மதுபான கடையில் உயர் ரக மதுவை ஒருவர் வாங்கி சென்றுள்ளார்.
அப்போது வெளியில் சென்று மதுவை திறக்கும் முன்பு பாட்டில் விஷ பூச்சி இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
இதனை அந்த நபர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதி விட்டுள்ளார். தொடர்ந்து இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
உயர் ரக மதுவில் இம்மாதிரியான விஷ பூச்சிகள் இருப்பது மது பிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



