fbpx
Homeபிற செய்திகள்கோவை அருகே தனியார் கிடங்கில் பதுங்கிய சிறுத்தையை பிடிக்க 2வது நாளாக வனத்துறை தீவிரம்

கோவை அருகே தனியார் கிடங்கில் பதுங்கிய சிறுத்தையை பிடிக்க 2வது நாளாக வனத்துறை தீவிரம்

கோவை குனியமுத்தூர் அருகே தனியாருக்கு சொந் தமான கிடங்கிற்குள் பதுங் கியிருக்கும் சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் 2வது நாளாக தீவிர நட வடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம் மதுக்கரை வன எல் லையை ஒட்டியுள்ள சுகுணாபுரம், அய்யப்பன் கோயில் வீதி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாக சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர்.

மேலும் அப்ப குதியில் உள்ள தனியார் கல்லூரி அருகே 3 நாய்களை சிறுத்தை கடித்துக் கொன்றதால் பொதுமக்களிடையே அச்சம் நிலவி வந்தது.

இதையடுத்து சிறுத் தையைப் பிடிக்க வனத் துறையினர் சுகுணாபுரம், தண்ணாசியம்மன் கோயில் உள்ளிட்ட 3 இடங்களில் கூண்டுகள் வைத்தும், 5 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொ ருத்தியும் அதன் நடமாட் டத்தைக் கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில், பொங்கல் விடுமுறை முடிந்த நிலையில் கோ வை, குனியமுத்தூர் பி.கே.புதூர் அருகே உள்ள தனியார் கழிவறை உபகரண கிடங்கை அதன் ஊழியர்கள் திங்கள் கிழமை காலை திறந்தனர். அப்போது உள்ளே சிறுத்தை இருந்தது தெரி யவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் கதவை அடைத்துவிட்டு வெளியே ஓட்டம்பிடித்தனர்.

இதுகுறித்து குனியமுத்தூர் போலீசார் மற்றும் வனத்துறையினருக்கு கிடங்கு உரிமையாளர் தகவல் தெரிவித்தார். இதையடுத்து அங்கு வந்த மதுக்கரை வனத் துறையினர் கிடங்கின் உள்ளே பார்த்தபோது 3 வயதுடைய சிறுத்தை பதுங்கி இருப்பதை உறுதி செய்தனர்.

இதையடுத்து மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் தலைமை யில் கோவை, மதுக்கரை, போளுவாம்பட்டி உள்ளிட்ட வனச் சரகங்களைச் சேர்ந்த வன ஊழியர்கள் 40க்கும் மேற்பட்டோர் கிடங்கை சுற்றிவளைத்து சிறுத்தையைப் பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

கிடங்கைச் சுற்றி வலை களால் மூடியும், கிடங்கின் இரண்டு வாயில்களி லும் கூண்டு வைத்தும் சிறுத்தையைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் தீயணைப்புத் துறையினரும் சிறுத்தையைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றும் சிறுத்தையை உயிருடன் பிடிக்கும் பணி 2வது நாளாக தொடர்கிறது.

சிறுத்தை கூண்டுக்குள் சிக்காவிட்டால் அதனை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் நடவடிக்கை பற்றி அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

படிக்க வேண்டும்

spot_img