fbpx
Homeபிற செய்திகள்கோவை அருகே கேரள வனத்தில் வாயில் காயத்துடன் தவிக்கும் யானை: சிகிச்சை அளிக்க தாமதம்

கோவை அருகே கேரள வனத்தில் வாயில் காயத்துடன் தவிக்கும் யானை: சிகிச்சை அளிக்க தாமதம்

கோவை மாவட்டம் ஆனைகட்டி பகுதி கேரள மாநில எல்லையில் அமைந்துள்ளது 70% வனப்பகுதி கொண்ட ஆனைகட்டியில் ஏராள மான யானைகள் உள்ளது.
யானைகளின் வலசை பாதையில் முக்கிய பங்கு வைக்கும் ஆனைகட்டி வனப்பகுதியில் எப்போதும் யானைகளின் நடமாட்டம் காணப்படும்.

இந்நிலையில் ஆனை கட்டி அருகே உள்ள பட்டிசாலை பகுதியில் தமிழக கேரள மாநிலங்களை பிரிக்கும் கொடுங்கரை ஆற்றின் நடுவே உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சோர்வுடன் 8 வயது மதிக்கத்தக்க ஆண் யானை நின்று கொண்டிருக்கிறது. அதன் வாயில் காயம் இருப்பதால் உணவு சாப்பிட மிகவும் சிரமப்பட்டு வருகிறது.

நேற்று மாலை முதல் இந்த யானை ஆற்றில் நின்று கொண்டு இருப்பதால் இதற்கு யார் சிகிச்சை அளிப்பது என இரு மாநில வனத்துறையினர் யோசனை செய்து வருகின்றனர்.

அதே சமயம் கேரள வனப்பகுதிக்குள் வந்து விடாமல் தடுக்கும் வகையில் கேரள வனத்துறையும் தமிழக வனப்பகுதிக்குள் வந்துவிடாமல் தடுக்கும் வகையில் தமிழக வனத்துறையினரும் நிற்பதால் யானை எந்த பகுதிக்கு செல்வது என தெரியாமல் ஆற்றின் நடுவில் பல மணி நேரமாக நின்று கொண்டிருக்கிறது.

கேரள வனத்துறையினர் முரண்டு பிடித்தாலும் தமிழக வனத்துறையினராவது அந்த யானைக்கு சிகிச்சை அளிக்க முன்வரவேண்டும் என சூழலியல் ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img