மாவட்ட நிர்வாகம், மாநகர காவல்துறை, ரோட்டரி டெக்ஸ்சிட்டி ஒருங்கிணைந்து நடத்தும் மெகா இளைஞர்கள் மாநாடு (யுவ இந்தியா 2022) போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு, சாலை பாதுகாப்பு, பல்வேறு வேலை வாய்ப்புகள் ஆகியவற்றை இலக்காக கொண்டு வரும் 16, 17, 18 தேதிகளில் நடைபெறும் என்று கோவை மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ். சமீரன் தெரிவித்தார்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தலைமையில், செய்தியாளர்கள் சந்திப்பு கூட்டம் நடந்தது. இதில், மாநகர காவல் ஆணையர் வி.பாலகிருஷ்ணன், யுவ இந்தியா சேர்மன் டாக்டர் கே.ஏ.குரியாச்சன், தலைவர் சி.ஆர். விஜய், செயலாளர் டாக்டர் நஞ்சன் பாலு ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆட்சியர் கூறியதாவது:
கோவை மாவட்டம், நவஇந்தியா, இந்துஸ்தான் கல்லூரியில் மாவட்ட நிர் வாகம், மாநகர காவல் துறை, ரோட்டரி டெக்ஸ் சிட்டி ஒருங்கிணைந்து நடத்தும் மெகா இளைஞர் கள் மாநாடு (யுவ இந்தியா 2022) போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு, சாலை பாதுகாப்பு, பல்வேறு வேலைவாய்ப்புகள் ஆகி யவற்றை இலக்காக கொண்டு மூன்று நாள் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்ச்சியில், பள்ளிக் குழந்தைகள் 1000 பேரும், கல்லூரிகளை சேர்ந்த 9000 இளைஞர்களும் கலந்து கொள்ள உள்ளனர். பல்வேறு துறைகளை சேர்ந்த ஊக்கமளிக்கும் பேச்சாளர்கள், உயர் அலுவலர்கள் வருகை தர உள்ளனர்.
இளை ஞர்களுக்கு ஊக்கமளிக் கவும், நான் முதல்வன் திட் டத்தின்கீழ் வேலைவாய்ப்பு குறித்து வழிகாட்டுதல்களை வழங்க உள்ளனர்.
நிகழ்ச்சிக்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் காவல்துறை சார்பில் மேற்கொள்ளப்படும்.
போதைப்பொருள் தடுப்பு, சாலை பாதுகாப்பு விழிப்பு ணர்வில் இளைஞர்களை பங்கெடுக்க வைக்கும் வகையில் இந்நிகழ்ச்சி ஏற் பாடு செய்யப்பட்டுள்ளது.
குறும்படங்களில் சவால்
போதைப்பொருள் தடுப்பு குறித்து குறும்படம் எடுக்கும் போட்டிகள் நடத்தப்பட்டது. 182 குறும்படங்கள் வரப்பெற்றுள்ளன. இதிலிருந்து தேர்வு செய்யப்பட்ட சிறந்த 10 குறும்படங்கள் இந்நி கழ்ச்சியில் ஒளிபரப்பப் படவுள்ளன.
இதில் 5 குறும்படங்கள் தேர்வு செய்யப்படும். அந்த குறும்பட இயக்குநர்களுக்கு திரைப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உடன் உரையாடும் வாய்ப்பு வழங்கப்படும்.
இவர்களில் சிறந்த ஒருவருக்கு லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தில் துணை இயக்குநராக பணியாற்ற வாய்ப்பு கிடைக்கும். இதன் மூலம் இளைஞர்களின் திறன்களை கண்டறிந்து வெளிக்கொண்டுவரவும், போதைப்பொருள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த இந்தபோட்டி சிறந்த வாய்ப்பாக இருக்கும்.
இராணுவம், விமான படை, கடற்படை போன்ற யூனிபார்ம் சர்வீஸ்களில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்து வழிகாட்டுதல் வழங்கப்படும். போதைப்பொருட்கள் பழக்கத்தாலும், சாலை விபத்துக்களினாலும் இளைஞர்கள் பழியாகாமல் இருக்கவும் வழிகாட்டுதல் வழங்கப்படும்.
பருவமழை முன்னெச்சரிக்கை
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அலுவலர்களு டன் ஆய்வு கூட்டம், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்களின் ஆய்வுக்கூட்டம் நடத்தப் பட்டுள்ளது.
மழையினால் பாதிக்கப்படக் கூடியதாக கண்டறியப்பட்டுள்ள வால் பாறை, மேட்டுப்பாளையம், ஆனைமலை உள்ளிட்ட 16 இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, முன் னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் குளங்கள், குட்டைகள் தூர்வா ரப்படும் பணிகள் மாநக ராட்சிகளில் 85 சதவீதமும், பிறப்பகுதிகளில் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளன. மாநகராட்சிகளில் இன்னும் ஒருவாரங்களில் மீதமுள்ள பணிகள் நிறைவடையும்.
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை தயார்நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் கட்டுப்பாட்டு அறை, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
மழைக்காலங்களில் சுரங் கப்பாதைகள் மற்றும் சாலைகளில் தங்கும் மழை நீரை அகற்ற மாநகராட்சி சார்பில் தேவையான மோட்டார்கள் தயார் நிலையில் உள்ளன.
கேரள மாநிலத்தில், பறவைக் காய்ச்சல் பரவுவதாக தகவல் வரப்பட்டுள்ளதை தொடர்ந்து.
வாளையார் சோதனைச்சாவடியில், கோழி ஏற்றிவரும் வாகனங் கள், கோழி சார்ந்த பிற பொருட்கள் கொண்டு வரும் வாகனங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள் ளப்பட்டு வருகிறது.
சோதனையின் அடிப்படையில் சில வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்தார்.
யுவ இந்தியா-2022 நிகழ்ச்சி குறித்த சிற்றேடு(Brochure) யை மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், மாநகர காவல் ஆணையர் வி.பால கிருஷ்ணன் ஆகியோர் வெளியிட்டனர்.



