Homeபிற செய்திகள்கோவையில் 18, 19 தேதிகளில் எஸ்.பி.ஐ. வீட்டுக்கடன் திருவிழா

கோவையில் 18, 19 தேதிகளில் எஸ்.பி.ஐ. வீட்டுக்கடன் திருவிழா

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்.பி.ஐ.) வழங்கும் வீடு, வீட்டுக் கடன் திருவிழா வரும் 18, 19 தேதிகளில் நடை பெறுகிறது.

இதுகுறித்து ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதா வது: கோவை ரயில் நிலையம் அருகில் குறிஞ்சி காம்ப்ளக்சில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வளாகத்தில் இக் திருவிழா காலை 10 முதல்இரவு 7 மணிவரை நடைபெறும். அனுமதி இலவசம்.

தடையில்லாத வங்கிச் சேவையின் மூலம் வங் கியின் பல்வேறு பய னுள்ள திட்டங்களை பொதுமக்களிடம் நேரடி யாகக் கொண்டு செல்வதே இத்திருவிழாவின் நோக்கம்.

இடைத்தரகர்கள் இல்லாமல் வீடு மற்றும் கார் விற்பனையாளர்களை நேரில் சந்தித்து பொது மக்கள் தாங்கள் விரும் பும் சொத்துகளை வாங்க முடியும். தயார்நிலையில் பல்வேறு விலைகளில் உள்ள சொத்துகளை வாடிக்கையாளர்கள் உடனடி வங்கிக்கடன் வசதியுடன் வாங்கி மகி ழலாம்.

சிறப்பு சலுகை
திருவிழாவில் வீட்டுக்கடன் வாங்குபவர் களுக்கு பாங்க் சார்பில் சிறப்பு வட்டி விகிதத்தில் வீட்டுக்கடன் அளிக்கப் படுகிறது. பரிசீலனைக் கட்டணத்தில் 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்ப டுகிறது.

தேவையான ஆவணங்களுடன் கண் காட்சிக்கு வருபவர்களுக்கு வங்கி சார்பில் உடனடி கடன் ஒப்புதலும் அளிக் கப்படும். புதுவீடு வாங்கு வதற்கும், வீடு கட்டுவதற்கு, வீட்டின் கட்டுமானத்தில் மாற்றம் செய்வதற்கும் சுல பத்தவணை முறையில் எளிதாக கடன்பெறலாம்.

கட்டுமானத் துறையில் முன்னணியில் திகழும் 30-க்கும் மேற்பட்ட நிறுவனத்தினர் இடம் பெறுகிறார்கள். மிகவும் குறைந்த விலையில் வீடு, அப்பார்ட்மெண்ட், காலி இடங்களை தேர்வு செய்து வாங்க திருவிழா வாய்ப்பளிக்கிறது.

குறைந்த விலையிலும், விரும்பும் இடத்திலும் தேர்ந்தெடுத்து வாங் குவதற்கு ஏற்ப அப்பார்ட் மெண்ட்கள், தனி வீடு கள் திருவிழாவில் இடம் பெறுகின்றன.

கனவு இல்லத்தை சொந்தமாக்க இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ் வாறு அதில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img