தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மனுக்கள் குழு வினர் கோவையில் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை, மேம்பாலம், கழிவுநீர் சுத்திகரிப்பு பணி களை ஆய்வு செய்தனர்.
அதன் ஒரு பகுதியாக அவினாசி சாலை, விமான நிலைய சந்திப்பு அருகில் நெடுஞ்சாலை துறையின் சார்பில் கோல்ட்வின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை அமைக்கப்பட்டு வரும் மேம்பாலப்பணியை ஆய்வு மேற்கொண்டனர்.
அரவிந்த் மருத்துவமனை அருகே மேம்பால பணி கள் எந்த அளவிற்கு முடிக் கபபட்டுள்ளது, பணிகள் எவ்வாறு நடைபெற்று வருகிறது, என்பது குறித்த விளக்க புகைப்படங்களை பார்வையிட்டு அதிகாரி களிடம் கேட்டறிந்தனர்.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மனுக்கள் குழு தலைவர், கோவி செழியன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வில், உறுப்பி னர்கள் கதிரவன், கிரி, கோவிந்தசாமி, சங்கர், சந்திரன், செந்தில்குமார், பிரபாகர ராஜா, மாங்குடி உள்ளிட்டோரும், கோவை மேயர் கல்பனா ஆனந்த்குமார், வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் ஆகியோர் உடனிருந்தனர்.
இதில் செய்தியாளர் களை சந்தித்த, அக்கு ழுவின் தலைவர் கோவி.செழியன், இன்று கோ வையிலும் நாளை நீலகிரி மாவட்டத்திலும் வந்துள்ள மனுக்கள்மீதான விசாரணை செய்ய உள்ளதாகவும் 6 இடங் களில் நேரடி கள ஆய்வு மேற்கொள்ள உள்ளதா கவும் தெரிவித்தார்.
மேலும் இந்த அவிநாசி சாலையில் கோல்டுவின்ஸ் முதல் உப்பிலிபாளைம் வரை உள்ள மேம்பால பணிகள் விரைந்து நடைபெற்று வருவதாகவும் கூறினார். சுமார் 1620 கோடி ரூபாய் செலவில் அமைக்கப் படுகிற இந்த பாலத்தை விரைந்து முடிக்க முதல்வர் நெடுஞ்சாலை துறை அமைச்சர், பொறுப்பு அமைச்சர் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.
கள ஆய்வு மேற்கொள்ளும் 6 இடங்களில் 5 இடங்கள் மனுதாரர்கள் கோரிக்கை வைத்த இடங்களாகவும், ஒரு இடம் பொதுமக்கள் நலன் கருதி ஆய்வு தாங்களாக ஆய்வு செய்வதாக கூறினார்.
மேலும் இன்றைய தினம் ஆய்விற்கு 340க்கும் மேற்பட்ட மனுக்கள் வந் துள்ளதாகவும், அதில் 122 மனுக்கள் மீதான விசாரணை நடத்த உள் ளதாக கூறினார். மேலும் தனிநபர் மனுக்களை இந்த குழு ஆய்வு செய்யாது என கூறிய அவர், பொதுநலன் மனுக்களை மட்டும் ஆய்வு செய்யும் என தெரிவித்தார்.
இதனை தொடந்து, டைடல் பார்க் அருகில் BT சாலை அமைக்கும் பணி, வெள்ளலூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி சிங்காநல்லூரில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமான பணிகள், 63வது வார்டு ஜோதி நகரில் மழைநீர் வடிகால் புரனமைப்பு பணிகளை பார்வையிட உள்ளனர்.



