fbpx
Homeபிற செய்திகள்கோவையில் போர் நினைவு சின்னம் அமைக்க கோரிக்கை

கோவையில் போர் நினைவு சின்னம் அமைக்க கோரிக்கை

மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் மற்றும் தக்ஷின் பாரத் ஏரியா சார்பில் முன்னாள் ராணுவத்தினர், உயிரிழந்த ராணுவ வீரர்களின் மனைவிகளுக்கான குறைதீர்ப்பு முகாம் கோவை எஸ்.என்.ஆர் கலை அரங்கத்தில் நடைபெற்றது.


இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ராணுவத்தினர், உயிரிழந்த ராணுவ வீரர்களின் மனைவிகள் 50க்கும் மேற் பட்டோர் கலந்து கொண்டு ராணுவ உயர் அதிகாரிகளிடம் தங்களது குறைகளை தெரிவித்தனர்.


இதில் ஓய்வூதியம், மருத்துவக்காப் பீடு, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் உள்ள குறைகளை முன்னாள் ராணுவ வீரர்கள் கோரிக்கைகளாக முன் வைத்தனர்.
இதுகுறித்து கோவை மாவட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் நலச் சங்கத்தின் மாவட்ட தலைவர் பாஸ்கரன் கூறுகையில், “இந்த குறைதீர்ப்பு முகாமில் எங்கள் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

மேலும், எங்களது நீண்டகால கோரிக்கையாக கோவையில் போர் நினைவு சின்னம் அமைத்தல், வீட்டு வரியில் இருந்து விலக்கு, டோல் கட்டணத்தில் இருந்து விலக்கு, வேலைவாய்ப்பில் முன்னுரிமை ஆகியவை வலியுறுத்தப்பட்டுள்ளன.” என்றார்.

இந்த குறை தீர்ப்பு முகாமில் மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநக ராட்சி ஆணையர் பிரதாப் குமார், ராணுவ அதிகாரிகள் கலந்து கொண் டனர்.

படிக்க வேண்டும்

spot_img