fbpx
Homeபிற செய்திகள்கோவையில் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காவிட்டால் கடும் நடவடிக்கை - ஆட்சியர் சமீரன் எச்சரிக்கை

கோவையில் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காவிட்டால் கடும் நடவடிக்கை – ஆட்சியர் சமீரன் எச்சரிக்கை

கோவை மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து ஆட்சித்தலைவர் ஜி.எஸ்.சமீரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கொரோனா தொற்று கோவையில் அதிகமாக பரவி வரும் நிலையில் கோவையில் இரவு 10 மணி முதல் காலை 5 வரை ஊரடங்கு இருக்கும். வருகின்ற 9 ம் தேதி முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும்.

மழலையர் மற்றும் 9 ம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாண வர்களுக்கு நேரடி வகுப்புகள் இருக்காது. மாண வர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரப்ப டுத்தப்பட்டுள்ளது.

கோவையில் இரண்டாம் கொரோனா அலையில் நாள் ஒன்றுக்கு 4700 வரை இருந்த நிலையில் படிப்படியாக குறைந்து 72 இருந்தது. தற்போது ஒரே நாளில் 240 ஆக உயர்ந்துள்ளதால் பொது இடத்தில் கொரோனா விதிகளை கடைபிடிக்கவில்லை என்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் கோவை மாவட்டத்தின் 11 மாநில எல்லை சோதனை சாவடிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொடீசியா அரங்கில் 350 படுக்கைகள் உள்பட மாவட்டத்தில் 2730 படுக்கைகள் தயாராக உள்ளன.

1500 படுக்கைகள் அரசு மருத்துவமனையில் தயாராக உள்ளது. 99 கிலோ லிட்டர் ஆக்ஸிஜன் கொள்ளளவு தயார் நிலையில் இருக்கிறது. கொரோனா பாதிக்கப்பட்டு வீட்டு தனிமையில் இருப்பவர்கள் கட்டுப்பாட்டு அறை மூலமாக தொடர்ந்து கண்கா ணிக்கப்படுவார்கள்.

கடந்த வாரத்தில் ஒமைக்ரான் தொடர் பாக வெளிநாடு மற்றும் வெளி மாநிலத்தில் இருந்து வந்தவர்கள் 5300 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. எஸ் ஜீன் வகை தொற்று தொடர்பாக கோவையில் மூன்று பேருக்கு சோதனை ஆய்வு மேற்கொள் ளப்பட்டு வருகிறது.

மேலும் கோவையில் தற்போது வரை கட்டுப்பாட்டு பகுதிகள் இல்லை. துடியலூர், சூலூர் மேட்டுப்பாளையம் பகுதிகளில் கொரோனா தொற்று அதிகமாக காணப்படும் நிலையில் இன்று ஒரே நாளில் 9 ஆயிரம் கொரோனா பரிசோதனை செய் யப்பட்டுள்ளது.

வரும் நாட்களில் 15 ஆயிரம் பரிசோதனை வரை செய்யப் படும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img