ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனத்தின் தி பியூட்டிபுல் ஹோம்ஸ் கடையில் வீட்டு அலங்காரப் பொருட்கள் அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கின்றன.
கோவை வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் ஏசியன் பெயிண்ட்ஸ் சார்பில் தி பியூட்டிபுல் ஹோம்ஸ் கடையைத் திறந்துள்ளது.
சுக்ரவார்பேட்டை மில்சாலையில் அமைந்துள்ள இந்த கடையை ஏசியன் பெயிண்ட்ஸ் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அமித் சிங்கால் திறந்துவைத்தார். இது கோவையில் திறக்கப்பட்டுள்ள இரண்டாவது கடை ஆகும்.
இந்தக் கடையில் குடியிருப்பு மற்றும் வணிக ரீதியான இடங்களுக்குத் தேவையான பொருட்கள் பல்வேறு பிரிவுகளின் கீழ் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து நிர்வாக அதிகாரி அமித்சிங்கால் கூறுகையில், கோவையில் 8,000 சதுர அடியில் பிரம்மாண்டமாக அமைந்துள்ள பியூட்டிபுல் ஹோம்ஸ் கடை நாட்டின் மிகச்சிறந்த கடைகளில் ஒன்றாக விளங்குகிறது.
பலவகையான பர்னிச்சர்கள் ஒரு தளம் முழுவதும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. வீட்டில் ஆடம்பரமான குளியலறையை அமைக்க விரும்பும் வாடிக்கையாளர்களின் தனித்தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான பிரிவும் இந்தக்கடையில் இடம் பெற்றுள்ளது, என்றார்.



