மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி நினைவு தினத்தை முன்னிட்டு கோவை மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக, “கோவையில் அமைதி வேண்டும்“ என்பதை வலியுறுத்தி மத நல்லிணக்க சர்வ மத பிரார்த்தனை நடைபெற்றது.
கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் அலுவலகமான காமராஜர் பவனில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் மயூரா ஜெயக்குமார் தலைமை தாங்கினார். முன்னதாக மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி மரியாதை செய்யப்பட்டது.
சர்வ சமய பிரார்த்தனையில் இந்து, கிறிஸ்துவ மற்றும் இஸ்லாமிய மத போதகர்கள் கலந்து கொண்டனர். அவரவர் மத முறைப்படி துதி வழிபாடு நடத்தி கோவையில் அமைதி திரும்ப வேண்டும் என்று பிரார்த்தனை செய்தனர்.
தொடர்ந்து அனைத்து மதத்தினரும் இணைந்து சமாதானத்தை வலியுறுத்தி வெள்ளைப் புறாவை பறக்க விட்டனர். இந்த நிகழ்ச்சியில் அனைத்து மதங்களைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.