இந்தியாவில் 3வது அலை பரவத் துவங்கியதும் கொரோனா நோயாளிகளுக்கு மட்டும் முன்னுரிமை அளித்து சிகிச்சை அளிக்கப்படும்.
இதனால் வழக்கமான பரிசோதனை செய்பவர்கள் பிற நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகும்.
இதை ஒன்றிய அரசு கவனத்தில் கொண்டு அனைத்து தரப்பினரும் சிகிச்சை பெறும் வகையில் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட வேண்டும்.
கொரோனா சிகிச்சை அளிப்பதில், கட்டணம் வசூலிப்பதில் தனியார் மருத்துவமனைகளின் செயல்பாடுகள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
இதனால் சிகிச்சை பெற்றவர்கள் பொருளாதார ரீதியாக பல இன்னல்களை சந்திக்கின்றனர்.
எனவே கொரோனா கால கட்டத்தில் தனியார் மருத்துவமனைகளை அரசின் நேரடி கண்காணிப்பின் கீழ் கொண்டு வரலாம்.
முக்கியமாக ஒன்றிய அரசு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு பல ஆயிரம் கோடிகளை ஒதுக்கியுள்ளது. இந்த நிதியை கொரோனா தடுப்பு பணிகளுக்கு பயன்படுத்தலாம்.
கொரோனா தடுப்பு பணிகளுக்காக கூடுதல் நிதியை ஒதுக்கும் முயற்சியில் ஒன்றிய அரசு ஈடுபட வேண்டும்.
சுகாதாரத்துறையில் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி நிலமையை துரிதமாகவும், துல்லியமாகவும் கண்டறியும் முயற்சியில் இறங்க வேண்டும்.
புதிதாக பொறுப்பேற்றுள்ள ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மாநிலங்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும். மாநிலங்களின் கோரிக்கைகளை பரிசீலித்து உடனே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொரோனா விஷயத்தில் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சரின் செயல்பாடு சிறப்பாக இருக்க வேண்டும்.
இவர் நாட்டின் சுகாதார கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் எந்த மாதிரியான அணுகுமுறையை கையாளப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
3வது அலை மட்டுமல்ல எத்தனை அலைகள் வந்தாலும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை ஒவ்வொருவரும் கடைபிடித்தால் மட்டுமே தொற்று பரவலுக்கு முழுமையாக முற்றுப்புள்ளி வைக்க முடியும்.