fbpx
Homeபிற செய்திகள்கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி சார்பில்75 வது சுதந்திர தின அமுதப் பெருவிழா பேரணி

கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி சார்பில்75 வது சுதந்திர தின அமுதப் பெருவிழா பேரணி

கோவை மாவட்ட காவல்துறை மற்றும் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியும் இணைந்து நடத்திய 75-வது சுதந்திர தின அமுதப் பெருவிழா பேரணி கொங்குநாடு கல்லூரி வளாகத்தில் இன்று (சனிக்கிழமை) கலை 10 மணிக்கு தொடங்கியது.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்ட இந்த பேரணியை பெரியநாயக் கன்பாளையம் போலீஸ் துணை கண்காணிப்பாளர் செல்வராஜ் (பொறுப்பு) கொடி அசைத்து தொடங்கிவைத்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரியின் செயலர் மற்றும் இயக்குனர் டாக்டர் சி.ஏ.வாசுகி தலைமை தாங்கினார். முதல்வர் முனைவர் மா.லட்சுமணசாமிமுன்னிலை வகித்தார். இந்த பேரணி கல்லூரி வளாகத்தில் இருந்து புறப்பட்டு வெள்ள கிணறு பிரிவு, மேட்டுப்பாளையம் மெயின்ரோடு, துடியலூர் பஸ்நிலையம் வழியாக சென்று மீண்டும் புறப்பட்ட இடத்தை சென்றடைந்தது.

படிக்க வேண்டும்

spot_img