fbpx
Homeபிற செய்திகள்கே.பி.ஆர். பொறியியல் கல்லூரியில் ‘ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்’ இறுதிப்போட்டி

கே.பி.ஆர். பொறியியல் கல்லூரியில் ‘ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்’ இறுதிப்போட்டி

மத்திய கல்வி அமைச்சகத்தின் புதுப் படைப்பாக்கப் பிரிவு நாடு முழுவதும் ‘ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2022’ என்ற கல்லூரி மாணவர்களுக்கான தொழில்நுட்ப ரீதியிலான சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில் போட்டிகளை ஏற்பாடு செய்திருந்தது.

தமிழ்நாடு, கோவையில் உயர்கல்வி நிறுவனமாக விளங்குகின்ற கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் ஸ்மார்ட் இந்தியா ஹேக் கத்தான் இறுதிப்போட்டி கடந்த 25, 26-ம் தேதிகளில் நடைபெற்றது.

இந்தியா அளவில் இந்த போட்டியின் துவக்க விழாவில், புதுடெல்லியில் இருந்து மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் காணொளி மூலம் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

முக்கிய அம்சமாக பிரதமர் நரேந்திர மோடி காணொளி மூலம் மாணவர்க ளுடன் சிறப்புரையாற்றினார். வடிவமைப்பு மற்றும் வன்பொருள் பிரிவுக்கான போட்டிகள் ஆக. 25 முதல் 29-ம் தேதி வரை நடைபெறுகிறது.

அரசாங்கம், அமைச்சகங்கள், பல்வேறு துறைகள், தொழிற்சாலைகள் மற்றும் பிற நிறுவனங்களின் சிக்கலான பிரச் னைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஒரு தளத்தை உருவாக்கி அதற்கு மாணவர்கள் தீர்வுகளை கண்டுபிடிக்கும் வகையில் இந்த ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் உள்ளது.

இதில் கல்வி நிறுவனங்களில் பயிலும் இலட்சக்கணக்கான மாணவர் கள் பங்கு பெறுவது அவர்களின் கல்வி கற்றலை பரிசோதித்து, சீரமைத்து, மேம்படுத்துவதோடு புதுமையான கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளவும், தொழில் முனைவோராகவும் ஆர்வமாக செயல்படவும் இந்த போட்டிகள் பெரி தும் உதவுகிறது.

மொத்தம் 62 நிறுவனங்கள் 476 பிரச்சனைகளை தீர்வு காண்பதற்கான மத்திய அரசால் அங்கீகாரம் வழங்கப் பட்டுள்ளது. இதில் ஆரம்ப நிலையில் வெற்றி பெற்ற 2033 அணிகளைச் சேர்ந்த 15,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

75-வது சுதந்திரத் திருநாள் அமுதப் பெருநாள் (ஆசாதி கா அமிருத் மகோத்சவ்) கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக மத்திய அமைச்சகத்தின் புதுப்படைப்பாக்கப் பிரிவு மற்றும் தொழில்நுட்ப கல்விக்கான அகில இந்திய கவுன்சில் நாடு முழுவதும் இருந்து 75 உயர் கல்வி நிறுவனங்களை தேர்வு செய்து அவற்றை இந்த போட்டிகள் நடத்தும் நோடல் மையங்களாக அறிவித்துள்ளது.

இதில் கோவை கே.பி.ஆர். பொறி யியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மென்பொருள் ஸ்மார்ட் இந்தி யன் ஹேக் கத்தான் இறுதிப் போட்டிக்கு, நோடல் மையமாக செயல்பட்டது.

இங்கு நடைபெற்ற போட்டியில் 22 குழுக்கள் 163 மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு 6 வகையான தொழில்நுட்ப சிக்கல்களுக்கு பிரச்சனை அறிக்கைகளை நிறுவனங்கள் வழங்கின.

இதில் ஒவ்வொரு சிக்கலுக்கும் தீர்வு கண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு முதல் பரிசாக ஒரு லட்சம் ரூபாயை அரசு அறிவித்திருந்தது.

கே.பி.ஆர்.பொறியியல் கல்லூரி யில் நடைபெறும் இறுதிப் போட் டிகள் தொடக்க விழாவிற்கு கே.பி.ஆர். குழுமங்களின் தலைவர் கே.பி.ராமசாமி வழிகாட்டுதலில், கல்லூரி முதல்வர் மு.அகிலா தலைமை தாங்கினார்.

சிறப்பு விருந்தினர்களாக கோவை ப்ளோ லிங்க் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி நித்தியானந்தன் தேவ ராஜ், கே.பி.ஆர். கல்லூரிக்கான நோடல் மைய தலைவராக புனே எல் அண்ட் டி இன்போடெக் நிறுவனத்தின் டேட்டா சயின்ஸ் முதல்வர் பிரதாப் சனாப் கலந்து கொண்டனர்.

நிறைவு விழா மற்றும் பரிசளிப்பு விழா வில் முருகப்பா குழும சாந்தி கியர்ஸ் நிறுவனத்தின் தொழில்நுட்ப பிரிவு தலைவர் மனு ரஹிம் அக்ஷரம் வெற்றி பெற்ற அணிக்கு பரிசுகளை வங்கினார்.

படிக்க வேண்டும்

spot_img