fbpx
Homeபிற செய்திகள்கே.பி.ஆர். பொறியியல் கல்லூரி வளாகத்தில் நவீன தொழிற்பயிற்சி மையத்துக்கு அடிக்கல்

கே.பி.ஆர். பொறியியல் கல்லூரி வளாகத்தில் நவீன தொழிற்பயிற்சி மையத்துக்கு அடிக்கல்

கோவை கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் எல் அண்ட் டி நிறுவனத்தின் புதிய தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய நவீன தொழில் பயிற்சி மையத் திற்கான அடிக்கல் நாட்டு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

கே.பி.ஆர் குழும நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் கே.பி.ராமசாமி தலைமை தாங்கி பேசுகையில், இந்த தொழில்நுட்ப பயிற்சி மையத்தில் பல்வேறு கட்டமைப்புகள் நிறுவப்படும்.

இது மாணவர்களின் நல்ல தொழில்நுட்ப வாழ்க்கைக்கான தொடக்கப் புள்ளியாகவும் உயர்ந் தபட்ச சம்பளத்தில் அவர்களுடைய பொறியியல் பணியை துவக்க ஏதுவாகவும் இருக்கும் என்றார்.

எல் அண்ட் டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனரும், முதன்மை செயல் அதிகாரியுமான எஸ்.என்.சுப்பிரமணியன், எல் அண்ட் டி தொழில் நுட்ப பயிற்சி மையத்திற்கு அடிக்கல் நாட்டி பேசியதாவது:

பாடத்திட்டத்தில் படிப்பது மட்டுமல்லாமல் இது போன்ற நவீன தொழில்நுட்பம் சார்ந்த அறிவும், பயிற்சியும் அதைத் தொடர்ந்து அனுபவபூர்வமான வடிவமைப்புகளை அமைக்கும் திறனும் பெற்றால்தான் நவீன உலகத்தில், தங்களுக்கென ஒரு நிலையானஇடத்தை பெற முடியும்.

எல் அண்ட் டி நிறுவனத்தின் மிக நீண்ட கால தொழில்நுட்ப பயணத்தை குறிப்பிட்டு கல்லூரி மாணவர்களுக்காக தங்களுடைய தொழில்நுட்ப அறிவைபகிர்ந்து கொள்ள இந்த தொழில்நுட்ப பயிற்சி மையம்ஒரு புதிய முயற்சியாக அமையும் என்றார்.

கே.பி.ஆர். பொறியியல் கல்லூரியில் எல் அண்ட் டி-யின் தொழில்நுட்ப மையம் அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் கே.பி.ஆர். கல்லூரி தலைவர் டாக்டர் ராமசாமி எல் அண்ட் டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் சுப்பிரமணியம் கையெழுத்திட்டனர்.

கல்லூரி முதல்வர் முனைவர் மு.அகிலா கூறுகையில், இந்தியாவிலேயே ஒரு புதிய முயற்சியாக எல் அண்ட் டி நிறுவனத்தின் நவீன தொழில் நுட்பங்கள் அனைத்தையும் உள்ளடக் கிய ஒரு மையத்தை கே.பி.ஆர் பொறியியல் கல்லூரியில் நிறுவுவது ஒரு கூட்டு முயற்சி என்றார்.

எல் அண்ட் டி நிறுவனத்தின் கல்வி பிரிவு முதன்மை செயல் இயக்குனர் சபயாச்சி தாஸ், எல் அண்ட் டி நிறுவனத்தின் கல்லூரி தொடர்பு பிரிவு தலைவர் பெபின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img