fbpx
Homeபிற செய்திகள்கே.பி.ஆர். பொறியியல் கல்லூரி-இன்டெல் புரிந்துணர்வு ஒப்பந்தம்

கே.பி.ஆர். பொறியியல் கல்லூரி-இன்டெல் புரிந்துணர்வு ஒப்பந்தம்

கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியும் இன்டெல் கார்ப்பரேஷன் நிறுவனமும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
கே.பி.ஆர்.பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, முதல்வர் முனைவர் மு.அகிலா முன்னிலை வகித்தார்.

இன்டெல் ஃபைஸ் நிறுவனத்தின் இயக்குனரும், பொது மேலாளருமான பிரதீப் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் இன்டெல் கார்ப்பரேஷன் நிறுவனம் அதன் நுண்ணறிவு அமைப்புகள் ஆய்வகத்தை கே.பி.ஆர். பொறியியல் கல்லூரி வளாகத்தில் நிறுவுகிறது.

இதன் மூலம் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ், மெஷின்லேர்னிங், டீப்லேர்னிங், இன்டர்நெட் ஆப் திங்க்ஸ் மற்றும் உயர் செயல்திறன் கம்ப்யூட்டிங் போன்ற அதிநவீன தொழில்நுட்பங்களில் மாணவர்களுக்கு பாடங்களை வழங்க உள்ளது.

இன்டெல் நிறுவனத்தின் பல்வேறு அதிநவீன வன்பொருள் மற்றும் மென்பொருள் ஆகியவற்றில் மாணவர்கள் பயிற்சி பெறவும், இந்த ஆய்வகம் பயன்படுத்தப்பட உள்ளது.

இதன் மூலம் இக்கல்லூரியில் பயிலும் மாணவர்கள், நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் மென்பொருள்களில் கற்று, பயிற்சி பெற்று அதன் மூலம் சிறந்த நிறுவனங்களில் சிறந்த வேலைவாய்ப்பை பெறுவதற்கு உதவியாக இருக்கும்.

படிக்க வேண்டும்

spot_img