தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி செலுத்தும் திட்டம் அண்மையில் தமிழக அரசால் துவங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து கோவை கே.எம்சி.எச்.மருத்துவமனை சார்பாக இலவச கொரோனா தடுப்பூசி திட்டத்தின் கீழ், முதல் கட்டமாக வாகராயம்பாளையம் ஊராட்சி பகுதி பொதுமக்களுக்கு 500 டோஸ் இலவச கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது.
முன்னதாக இதற்கான துவக்க விழா வாகராயம்பாளையம் ஆரம்ப சுகாதார அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில், கே.எம். சி.எச். மருத்துவமனை டீன் டாக்டர் குமரன்,கே.எம்.சி.எச். மருத்துவகல் லூரி மருத்துவமனை தலைமை செயல் அதிகாரி கார்த்திகேயன், மாவட்ட சுகாதாரதுறை இணை இயக்குனர் டாக்டர் சந்திரா, கோவிட் நோடல் அதிகாரி டாக்டர் ராஜேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து கோவை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இந்த இலவச தடுப்பூசி திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட உள்ளது குறிப்பிடதக்கது.



