fbpx
Homeபிற செய்திகள்கிருஷ்ணகிரி நகராட்சி: 32 வார்டுகளில் அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

கிருஷ்ணகிரி நகராட்சி: 32 வார்டுகளில் அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

கிருஷ்ணகிரி நகராட்சியில் போட் டியிடும் 32 வார்டுகளுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரியில் நகராட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் நேற்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப் பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டனர்.

அதாவது மொத்தம் உள்ள 33 வார்டுகளில் 32 வார்டுகளுக்கு மட்டும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு: 1வது வார்டு ஏஜாஸ், 2வது வார்டு இந்துமதி சவுந்தரபாண்டியன், 3வது வார்டு அஞ்சலி வாசு, 4வது வார்டு நீலமேகம், 5வது வார்டு சந்திரா வெங்கடேசன், 6வது வார்டு பொன்மணி அர்ஜூனன், 7வது வார்டு சம்ஷாத் ரியாஸ், 8வது வார்டு வெங்கடேசன், 9வது வார்டு நாகஜோதி மூர்த்தி, 10வது வார்டு கோவிந்தராஜ், 11வது வார்டு விஜியா நாகராஜன், 12வது வார்டு எழிலரசி சரவணன், 13வது வார்டு முனியம்மாள் நல்லப்பன், 14வது வார்டு மகாராணி ராஜாமணி, 15வது வார்டு செல்வி சீனிவாசன், 16வது வார்டு அரிபிரசாந்த், 17வது வார்டு சங்கர்பாபு, 18வது வார்டு பீட்டர் அலெக்சாண்டர், 19வது வார்டு மாரியப்பன், 21வது வார்டு ராஜேஷ், 22வது வார்டு அமுதா சிவா, 23வது வார்டு லட்சுமி மாரி, 24வது வார்டு காயத்ரி தங்கமுத்து, 25வது வார்டு சேகர், 26வது வார்டு லீலா சந்திரைய்யா, 27வது வார்டு சுஜித்தரா கார்த்திக், 28வது வார்டு பர்ஹத் தமிசுல்லா, 29வது வார்டு செந்தாமரை வினோத், 30வது வார்டு நளினி பழனி, 31வது வார்டு சந்திரைய்யா, 32வது வார்டு மக்பூல், 33வது வார்டு அறிவுச்சுடர் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள் ளனர்.

இதில் 20வது வார்டு வேட்பாளர் மட்டும் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதற்கான வேட்பாளர் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img