கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலகம் முன்பு, தமிழ்நாடு நகராட்சி மாநகராட்சி அலுவலர் சங்கம் சார்பில், அரசாணை 152ஐ ரத்து செய்யக்கோரி நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
சங்கத் தலைவர் சங்கர் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் செந்தில்குமார் செழியன் கோரிக்கை விளக்கவுரை ஆற்றினார்.
மாவட்டத் தலைவர் சரவணன், மாநில செயலாளர் பெருமாள், துணைத் தலைவர் மஞ்சுளா, பட்டுவளர்ச்சித் துறை செல்வகுமார், மகளிர் துணைக்குழு சரஸ்வதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் சந்திரன் சிறப்புரை ஆற்றினார்.
துணைத் தலைவர் வெங்கடேசன் நிறைவுரை ஆற்றினார். துணைத் தலைவர் சந்திரன்மோகன் நன்றி கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில், வருவாய் உதவியாளர்கள், எழுத்தர்கள், கன்சர்வன்சி இன்ஸ்பெக்டர்கள், ஸ்கில்டு பணியாளர்கள், அன்ஸ்கில்டு பணியாளர்கள், ஓட்டுனர்கள், துலக்குனர்கள், அலுவலக உதவியாளர்கள், இரவு காவலர்கள், து£ய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இவர்களை பாதிக்கும் அரசாணை 152ஐ ரத்து செய்ய வேண்டும்.
தமிழக அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.