கியா இந்தியா கியா காரேன்ஸின் ஸ்கெட்சுகளை வெளியிட்டுள்ளது, அது நிறுவனத்தின் 16 டிசம்பர், 2021-ல் அதன் உலகப் பிரீமியருக்காக அதிகம் எதிர் பார்க்கப்படுகிற மாடலாகும்.
ஆடம்பரமான உட்புறங்களுடன், ஸ்மார்ட் கனெக்டிவிட்டி அம்சங்கள், உறுதி யான வெளிப்புறங்கள் மற்றும் மூன்றாம் வரிசையில் பயணிப்பவர்களையும் உள்ளடக்கி அனைவருக்கும் தாராளமான இடம், இந்தியாவில் பொழுதுபோக்கு வாகனங்களுக்கான புதிய பிரிவினை உருவாக்க கியா காரேன்ஸ் தயாராக உள்ளது.
ப
ரிணமித்தலையும், ஒன்றாகப் பய ணம் செய்வதை விரும்புகிற இந்தியக் குடும் பங்களின் நிறைவேற்றப்படாத தேவைகளையும், மனதில் கொண்டு கியா காரேன்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ‘ஆபோ சிட்ஸ் யுனைடெட்’ என்கிற புதிய வடிவமைப்புத் தத்துவத்தை நிறுவனம் அறிமுகம் செய்கிறது. உறுதியான வடிவமைப்பு மொழி இயற்கையிலும் மனிதத்தன்மையிலும் காணப்படுகிற முரண்களில் இருந்துஈர்ப்பினை எடுத்துக் கொண்டுள்ளது.
இந்த வடிவமைப்புத் தத் துவம் ஐந்து உறுதியான தூண்களை அடிப்படையாகக் கொண்டது. இயற்கைக்கான உறுதி, காரணத்திற்கான மகிழ்ச்சி, முன்னேறுவதற்கான சக்தி, வாழ்க்கைக்கானத் தொழில்நுட்பம்.
காரேன்ஸின் வடிவமைப்பு ‘இயற்கைக்கான உறுதி’ என்கிற கருப்பொருளின் அடிப்படையிலானது. இயற்கையின் கச்சித மானத் தன்மைக்கும் எளி மைக்கும் அது அஞ்சலி செலுத்துகிறது.
கியா காரேன்ஸ் நிறுவனத்தின் தனிச்சிறப்பான மற்றும் சக்தி வாய்ந்த வடிவமைப்பு மொழி, இளமையின் ஆளு மைப் படுத்தலை அதன் பண்பில் உள்ளடக்குகிறது.
வெளிப்புறம் ஹைடெக் ஸ்டைலிங் விவரங்களுடன் பெருமை கொள்கிறது.
அது கியாவின் தனிச்சிறப்பான புலிமுக வடிவமைப்பினை முன்பக் கத்திலும், பளிச்சிடுகிற முன்னிலைப்படுத்தப்பட்ட இன்டேக் கிரில், எல்இடி விளக்குகள் மற்றும் பகல் நேரத்தில் செயல்படும் விளக்குகள் ஆகியவற்றை உள்ளடக்கி, அவை ஒன்றாக உறுதியான மற்றும் ஈர்க்கக்கூடிய தோற்றத்தைத் தருகின்றன.
இயங்கும் வாழ்க்கை முறைத் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவும் இந்தியாவில் தினசரி பயன்பாட்டிற்கான விருப்பத்திற்கேற்பவும் உள்பக்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
‘எமது சமீபத்திய வடிவமைப்புத் தத்துவமான ‘ஆப்போசிட்ஸ் யுனைடெட்’ என்பதை கச்சிதமாக கியா காரேன்ஸ் உள்ளடக்குகிறது.
அது வெற்றி கரமாக விளையாட்டுத்தனத்தை அதிநவீன ஆளுமை மற்றும் தனிச்சிறப்பான அழகியலுடன் ஒன்றாக இணைக்கிறது’ என்கிறார் மூத்த துணைத் தலைவரும் கியா டிசைன் சென்டரின் தலைமை அதிகாரியுமான கரீம் ஹபீப்.



