Homeபிற செய்திகள்கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய திட்டப் பணிகள்: கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் ஆய்வு

கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய திட்டப் பணிகள்: கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் ஆய்வு

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியம், காட்டாம்பட்டி, வடசித்தூர் ஆகிய பகு திகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள், இ.எஸ்.ஐ. மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 200 படுக்கைகளை மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஊரகப் பகுதிகளில் அடிப்படை கட்டமைப்பு களை மேம்படுத்துவதன் மூலம் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் சமூக பொருளாதார வளர்ச்சி ஏற்படுத்திட இயலும்.

கிராமப்புற மக்க ளின் வாழ்க்கை தரத் தை உயர்த்தி, அடிப் படை கட்டமைப்பு வசதி களை மேம்படுத்தும் வகையில், அரசு ஊரக வளர்ச்சித்துறைக்கு பல் வேறு தொலைநோக்குத் திட்டங்களை வகுத்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் செயல் படுத்தி வருகிறது.

கோவை மாவட்டத்தில் கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்தில், காட்டம் பட்டி வரை செல்லும் 7.78 கி.மீ. நீளமுள்ள சாலையை ரூ.10.15 கோடி மதிப்பில் இருவழி சாலையாக அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இப் பணியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் ஆட்சியர். பணிகளை தர மானதாகவும், விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் அறிவுறுத்தினார்.

வட சித்தூரில் பெரி யார் சமத்துவ புரத்தில் மொத்தம் 105 வீடுகள் உள்ளன. அவற்றில் 98 வீடுகளில் வசித்து வருபவர்கள் அவர் களே தங்கள் வீடுகளை பழுது பார்த்து கொள்ளும் வகையில் தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.49 இலட்சம் வழங்கப்பட்டு, வீடுகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

மீதமுள்ள பழுதடைந்த 6 வீடுகளை சீரமைக்க ரூ.5.57இலட்சம் மதிப்பில் டெண்டர் விடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டார்.

வடசித்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி யில் உள்ள சத்துணவு கூடத்தை ஆய்வு செய்து, அங்கு பயிலும் மாணவ, மாணவிகளிடம் ஆட்சி யர் உரையாடினார்.

அப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு வழங் குவதற்கு போதுமான அளவு சத்துணவுப் பொருட்கள், முட்டைகள் இருப்பில் உள்ளனவா என்று பதிவேடுகளை ஆய்வு செய்தார்.

முன்னதாக, இ.எஸ்.ஐ. மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 200 படுக்கைகளையும், புதியதாக அமைக்கப்பட்டு வரும் பிரேத பரிசோதனை அறை, புறக்காவல்நிலையம், பிராணவாயு தயாரிக்கும் அலகு ஆகியவற்றை மாவ ட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் ஆய்வு செய் தார்.

ஆய்வின்போது இ.எஸ்.ஐ. மருத்துவக்கல் லூரி மருத்துவமனை முதல்வர் மரு.ரவீந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வே ளாண்மை) தமிழ் செல்வி, கிணத்துக்கடவு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயகுமார், தனலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img