fbpx
Homeதலையங்கம்காலத்தின் கட்டாயம்

காலத்தின் கட்டாயம்

தமிழக அரசு 2-வது அலையை முடிவுக்கு கொண்டு வந்து, 3-வது அலை வராமல் தடுப்பதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகளில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலியில் விடுத்த வேண்டுகோளை போல கொரோனாவை வெல்வதற்கு தடுப்பூசிதான் மிகப்பெரிய ஆயுதமும், கேடயமும் ஆகும்.

அது போல மக்கள் தங்களை கொரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்ள கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

வீட்டைவிட்டு வெளியே வரும்போது எல்லோரும் முகக்கவசம் அணிய வேண்டும். கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும்.

பொது போக்குவரத்தை பயன்படுத்தும் போதும் அதிக கூட்டம் இருக்கும் இடங்களிலும் இரட்டை முகக்கவசங்களை பயன்படுத்தலாம் என்ற முதலமைச்சரின் ஆலோசனையை எல்லோருமே பின்பற்றலாம்.

என்றாலும் 2வது அலையின் கோர தாக்குதலுக்கு உள்ளாகிய இளைஞர் சமுதாயம் ஆலோசனைகளை முழுமையாக பின்பற்றுவதோடு மட்டுமல்லாமல் 3வது அலையை வரவிடாமல் தடுத்துக் கொள்வதே இன்றைய காலத்தின் கட்டாயம்.

படிக்க வேண்டும்

spot_img