Homeபிற செய்திகள்கார்டு-ஆன்-ஃபைல் டோக்கனைசேஷன் பயிலரங்கம் மாஸ்டர்கார்டு நிறுவனம் ஏற்பாடு

கார்டு-ஆன்-ஃபைல் டோக்கனைசேஷன் பயிலரங்கம் மாஸ்டர்கார்டு நிறுவனம் ஏற்பாடு

மாஸ்டர்கார்டு நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த பயிலரங் கில், கார்டு-ஆன்-ஃபைல் (CoF) டோக்கனைசேஷன் (tokenization) முறைக்கு மாறு வதால் கிடைக்கும் பலன்களை முன்வைத்தது.

இம்முறையின் கீழ் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு அடிப்படையிலான கட்டண முறைகளை பயன்படுத்தி அமேசான், நெட்ஃபிளிக்ஸ் மற்றும் சொமாட்டோ போன்ற இணையவழி- வர்த்தகத் தளங்க ளில் பாதுகாப்பாகவும், சௌ கரியமாகவும் கட்டணம் செலுத்தலாம்.

சைபர் மற்றும் நிதி குற்றங்களிலிருந்து நுகர் வோரைப் பாதுகாக்க -இணைய வழி-வர்த்தக வியாபாரிகளின் சர்வர்களில் கார்டு விவரங் களை சேமிப்பதற்கு மாற்று வழியாக, கார்டை பயன் படுத்தி மேற்கொள்ளும் பரி வர்த்தனைகளை இனிகார்டு-ஆன்-ஃபைல் (CoF) டோக் கனைசேஷன் முறையில் மேற்கொள்ள வேண்டுமென இந்திய ரிசர்வ் வங்கி (RBI) உத்தரவிட்டது.

இந்த புதிய விதிமுறைகள் வரும் ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளன.
நுகர்வோர் தங்களது கார்டு விவரங்களை டோக் கனைசிங் செய்வதன் மூல மாக, இன்று உள்ளதைப் போலவே சேமிக்கப்பட்ட கார்டு மூலமாக பணம் செலுத்தும் அனுபவத்தை தொடர்ந்து பெறலாம். கார்டு வழங்கு பவரின் பெயரையும், கார்டு எண்ணின் கடைசி நான்கு இலக்கங்களையும் மட்டுமே வியாபார இணையதளங்களும், செயலிகளும் சேமிக்க முடியும்.

எனவே, அங்கீகரிக்கப்படாத நபர் அல்லது ஹேக்கர் டோக்கனை அணுகினால், அவர்களால் அதைப் பயன்படுத்த முடியாது. டோக் கனைசேஷன் செயல்முறை யானது நுகர்வோரின் ஒப்புத லின் அடிப்படையிலானது.

அதைத் தேர்வு செய்யாதவர் கள் ஆன்லைனில் பணம் செலுத்துவதற்கு ஒவ் வொரு முறையும் அட்டை எண், காலா வதி ஆகும் காலம் போன்ற விவரங்களை அவராக குறிப்பிட வேண்டும்.

நுகர்வோரின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளைப் பற்றிய முக்கியத் தகவல்கள், சேவை வழங்கும் வங்கிகளிடமும், மாஸ்டர்கார்டு போன்ற அவற்றின் நெட் வொர்க்குகளிடமும் மட்டுமே இருக்கும்.

டோக்கனைசேஷன் நுகர்வோருக்கு புதிய அம்சங்களையும் வழங்குகிறது. அதன் மூலமாக அவர்கள் சேவை வழங்கும் வங்கியினை அணுகி, வெவ்வேறு வியா பாரத் தளங்களில் சேமித்து வைக்கப்பட்ட டோக்கன்கள் அனைத்தையும் காண முடியும்.

அப்படிப் பார்த்து, அந்தந்த வியாபார வலைதளங்கள் அல்லது செயலிக்கு செல்லா மலேயே அவற்றை ரத்து செய்யவும்/ ரத்து செய்ததை திரும்பப்பெறவும் / நீக்கவும் முடியும்.

இந்த வழிகாட்டுதல்களுக்கு இணங்கவும், தடையற்ற கட்டண அனுபவத்தை வழங்கு வதற்காகவும் மாஸ்டர்கார்டு நிறுவனம் ஜஸ்பே (Juspay), பேடிஎம் (Paytm), பேயூ (PayU), ரேசர்பே(Razorpay) மற்றும் கூகுள்பே (Google Pay) போன்ற முக்கிய கட்டண தளங்களை இணக் கத்திற்கு உட்படுத்தியுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img