காவல் துறை, ராணுவம், எல்லைப் பாதுகாப்பு படை போன்ற பாதுகாப்பு செயல்களில் ஈடுபட்டிருக்கும் வீரர்களுக்கு போதிய ஓய்வு கிடைப்பதில்லை. வேலைப் பளுவும் அதிகம்.
வார விடுமுறையை கூட எடுக்க முடியாத நிலை. போதிய தூக்கமின்மை, மனம் விட்டு யாரிடமும் பேசி கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள முடியாத நிலை என்று பல காரணங்களால் மனஅழுத்தத்துக்கு ஆளாகின்றனர்.
அவர்களுக்கு அவ்வப்போது புத்தாக்கப் பயிற்சி வகுப்புகள், விளையாட்டுக்கள், யோகா, தியான பயிற்சிகளுக்கு ஏற்பாடு செய்யலாம். சுற்றுலா செல்ல அனுமதிக்கலாம். வாரம் ஒரு நாள் கட்டாய விடுப்பு கொடுக்கலாம்.
இதனால் மனஅழுத்தத்தில் இருந்து விடுபடுவதுடன், நேர்மறை சிந்தனையுடன் அவர்கள் செயல்பட முடியும். அரசும், உயரதிகாரிகளும் உடனடியாக கவனம் செலுத்த வேண்டிய விஷயம் இது.



