Homeபிற செய்திகள்கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மூவருக்கு ‘வாழும் கைவினைப் பொக்கிஷம்’ விருது- ஒருவருக்கு ‘பூம்புகார்’ மாநில விருது

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மூவருக்கு ‘வாழும் கைவினைப் பொக்கிஷம்’ விருது- ஒருவருக்கு ‘பூம்புகார்’ மாநில விருது

கன்னியாகுமரி மாவட் டத்தை சேர்ந்த 3 பேருக்கு ‘வாழும் கைவினைப் பொக்கிஷம்’ விருதுகளும், ஒருவருக்கு ‘பூம்புகார் மாநில விருதும் முதல்வர் மு.க.ஸ்டா லின் வழங்கி கௌரவித்தார்.

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் நல்வழியில் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன், தமிழக மக்களின் வாழ்வில் புது ஒளியை ஏற்படுத்தும் வகையிலும், தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையிலும், அதற்கான அரசாணைகளைப் பிறப்பித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.

முதல்வர் தமிழ் இலக்கியத்திற்காக பணியாற்றி யவர்களை கௌரவிக்கும் விதமாக விருதுகள் வழங்குவது, கலைத்துறையில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு கலைமாமணி விருது, செம்மொழி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகள் வழங்கி பெருமைப்படுத்தியதோடு, பல்வேறு நலத்திட்ட உதவிகள், வளர்ச்சித்திட்ட பணிகளை மேற்கொண்டு, பிற மாநில முதல்வர்கள் வியந்து பாராட்டும்படி சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

அந்த வகையில், தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் சார்பில், கைவினைத் தொழிலுக்காகவே தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட 65 வயதுக்கு மேற்பட்ட 10 சிறந்த கைவினைஞர்களுக்கு, தமிழ்நாடு அரசால் ‘வாழும் கைவினைப் பொக்கிஷம்’ எனும் விருதுகள், கைத்திறத் தொழிலின் பங்களிப்பு, அபிவிருத்தி மற்றும் படைப்புகள் ஆகியவற்றில் சிறந்த 10 கைவினைஞர்களுக்கு பூம்புகார் மாநில விருதுகள் ஆகிய விருதுகளை விருதாளர்களுக்கு முதல்வர் கடந்த 13.04.2022 அன்று சென்னையில் நடந்த விழாவில் வழங்கி கௌரவித்தார்.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் தெரிவித்ததாவது:
‘வாழும் கைவினைப் பொக்கிஷம்’ எனும் விருது, கைவினைஞர்களை பாராட்டுவதற்கும், அவர்களின் திறனை ஊக்குவிப்பதற்கும், அதன்மூலம் திறனை வெளிகொணர்ந்து மற்றவர்களை ஊக்குவிப்பதற்கும், இவ்விருது ஆண்டு தோறும் 15 இலட்சம் மதிப்பில் வழங்கப்பட்டு வருகிறது.

வாழும் கைவினைப் பொக்கிஷம் விருதிற்காக இவ்வாண்டு 10 பிரிவுகளில், ஒவ்வொரு பிரிவிற்கும் ஒருவர் வீதம் மொத்தம் 10 நபர்களுக்கு 8 கிராம் தங்கப் பதக்கம், தாமிர பத்திரம், சான்றிதழுடன் ஒரு இலட்சம் ரூபாய் காசோலை வழங்கப்படுகிறது.

அதன்படி, கன்னியாகுமரி மாவட்டத்தில் 2021-22-ம் ஆண்டிற்கான ‘வாழும் கைவினைப் பொக்கிஷம்’ விருதுகள் கன்னியாகுமரி மாவட்டம், சுவாமியார்மடம் பகுதியை சார்ந்த வி. கமலம் (இயற்கை நார் பொருட்கள்), கொட்டாரம் பகுதியை சார்ந்த கே.வடிவேல் (கடல் சிப்பி பொருட்கள்), வடசேரி பகுதியை சார்ந்த முத்து சிவம் (கோயில் நகைகள்) ஆகிய 3 விருதாளர்களுக்கு ரூ.1 இலட்சம் ரொக்க பரிசும், 8 கிராம் எடையுள்ள தங்க பதக்கம், செம்பு பட்டயம் மற்றும் சான்றிதழை முதல்வர் மு.க.ஸ்டாலின் 13.04.2022 அன்று வழங்கி சிறப்பித்தார்.

‘பூம்புகார் மாநில விருது’ தமிழ்நாட்டின் சிறப்பான கைவினைஞர்களின் கைத்திறத் தொழிலின் பங்களிப்பு, அபிவிருத்தி மற்றும் படைப்புகளை கருத்தில் கொண்டு வழங்கப்படுகிறது.

இவ்விருதினை பெறும் கன்னியாகுமரி மாவட்டம் இரையூர் மாற்றுத்திறனாளி செல்வி டி.செல்லம்மைக்கு (இயற்கை நார் பொருட்கள்) ரூபாய் 50,000/- பரிசுத் தொகை, 4 கிராம் தங்கப் பதக்கம், தாமிரபத்திரம் மற்றும் தகுதிச் சான்றிதழை முதல்வர் விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.

இவ்விருதுகள் வழங்கி கௌரவித்த முதல்வருக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ‘வாழும் கைவினைப் பொக்கிஷம்’ விருதுகள் பெற்ற 3 கைவினை கலைஞர்கள் மற்றும் ‘பூம்புகார் மாநில விருது’ பெற்ற பயனாளிக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் ஆட்சியர்.

“முதுமையிலும் விருது வழங்கி கௌரவிப்பு”
விருது பெற்ற கொட்டாரம் பகுதியை சார்ந்த கே.வடிவேல் (வயது 72), தெரிவித்ததாவது:
எனக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். கடந்த 58 ஆண்டுகளாக கடல்சிற்பி செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். இதுநாள்வரை எந்தவொரு அங்கீகாரமும் கிடைக்கவில்லை.

முதல்வர் ‘வாழும் கைவினைப் பொக்கிஷம்’ விருது மற்றும் ரூ.1 இலட்சம் ரொக்கப்பரிசும், 8 கிராம் எடையுள்ள தங்க பதக்கம், செம்பு பட்டயம் மற்றும் சான்றிதழை வழங்கி கௌரவித்தார்.

முதுமையான வயதிலும் என்னுடைய தொழிலினை பாராட்டி விருது வழங்கி கௌரவித்த முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

“பணியை ஊக்குவித்து விருது
மாற்றுத்திறனாளி நெகிழ்ச்சி”
பூம்புகார் மாநில விருது பெற்ற பத்மநாபன்புதூர் பகுதியை சார்ந்த செல்லம்மை (வயது 52) தெரிவித்ததாவது:
பத்மநாபன்புதூர் பகுதியில் வசித்து வருகிறேன். என்னுடைய பெற்றோர் தவறிய நிலையில், சகோதரி அரவணைப்பில் உள்ளேன். மாற்றுத்திறனாளியான நான் திருமணம் செய்துகொள்ளவில்லை.

என்னுடைய அன்றாட செலவுக்காக இயற்கை நார்களை (சம்பை புல்) கொண்டு கூடை உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கும் பணியில் பல ஆண்டுகள் ஈடுபட்டு வருகிறேன்.

இதன்வாயிலாக கிடைக்கும் வருமானத்தில் என்னுடைய அன்றாட செலவுகளை கவனித்து வந்த நிலையில் மாற்றுத்திறனாளியாகிய என்னுடைய பணியினை ஊக்குவிக்கும் வகையில் முதல்வர் ‘பூம்புகார் மாநில விருது’ ரூபாய் 50,000/- பரிசுத் தொகை, 4 கிராம் தங்கப் பதக்கம், தாமிரபத்திரம் மற்றும் தகுதிச் சான்றிழ் வழங்கி கௌரவித்தார்.

என்போன்ற கலைஞர்களை கௌரவித்த முதல்வருக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

“வாழைநாரில் கலைப்பொருள்
தயாரித்து விற்கிறேன்”
விருது பெற்ற காட்டாத்துறை ஊராட்சி, சாமியார்மடம் பகுதியை சார்ந்த கமலம் (வயது 65) தெரிவித்ததாவது: எனக்கு 5 மகள்கள், 1 மகன் உள்ளனர். கணவர் இறந்து விட்டார். சிறு வயதிலிருந்து வாழைநார் பயன்படுத்தி, பொருட்கள் தயாரித்து கிடைக்கும் வருமானத்தில், மகள்கள், மகனை வளர்த்து ஆளாக்கினேன்.
மகன் வாழைநார் வாங்கி தருவதால் கூடை உள்ளிட்ட கலைப்பொருட்களை செய்து விற்பனை செய்து வருகிறேன்.

எனது இப்பணியினை அறிந்து கொண்ட தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம், அரசுக்கு பரிந்துரை செய்ததைத் தொடர்ந்து, ‘வாழும் கைவினைப் பொக்கிஷம்’ விருது மற்றும் ரூ.1 இலட்சம் ரொக்க பரிசும், 8 கிராம் எடையுள்ள தங்க பதக்கம், செம்பு பட்டயம் மற்றும் சான்றிதழை வழங்கி முதல்வர் கௌரவித்தார்.

இவ்விருதினை வழங்கிய முதல்வருக்கும், தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்திற்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

தொகுப்பு:
பா.ஜாண் ஜெகத் பிரைட்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்.
ஜா.லெனின் பிரபு.
உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி)
கன்னியாகுமரி மாவட்டம்.

படிக்க வேண்டும்

spot_img