கோவை மண்டல கட்டுமான பொறியாளர் சங்கத்தின் (கொசினா) முதலாம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் கோஇண்டியா ஹாலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தலைவர் எ.ஜெயவேல் அவர்கள் தலைமை ஏற்று நடத்தினார்.
செயலாளர் என்ஜினீயர் ஜி.பி.ராஜ துரை கடந்த ஆண்டின் (2021-&2022) செயலாளர் அறிக்கை தாக்கல் செய்தார். அதன்பின்னர் பொருளாளர் என்ஜினீயர் பழனிசாமி கடந்த ஆண்டின் வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்தார்.
பின்னர் சங்கத்தின் சட்ட திட்டங்கள் மற்றும் கணக்குகளுக்கு பொதுக்குழுவில் உறுப்பினர்களிடம் ஒருமனதாக ஒப்புதல் பெற்று நிறைவேற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மாதாந்திர கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக காவேரி குழுமத்தின் தலைவர் வினோத்சிங் ரத்தோர், நிர் வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.



