fbpx
Homeபிற செய்திகள்31 உற்பத்தியாளர், தொழில் குழுக்களுக்கு ரூ.23.25 லட்சம் மானியத்தொகை- அமைச்சர் காந்தி வழங்கினார்

31 உற்பத்தியாளர், தொழில் குழுக்களுக்கு ரூ.23.25 லட்சம் மானியத்தொகை- அமைச்சர் காந்தி வழங்கினார்

கிருஷ்ணகிரியில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம் 31 உற்பத்தியாளர் குழுக்கள் மற்றும் தொழில் குழுக்களுக்கு ரூ.23.25 லட்சம் மானியத் தொகையை அமைச்சர் காந்தி வழங்கினார்.

கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம் உற்பத்தியாளர் குழுக்கள் மற்றும் தொழில் குழுக்களுக்கு மானியம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை வகித்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் ஓசூர் பிரகாஷ், பர்கூர் மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில், தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி பங்கேற்று, 31 உற்பத்தியாளர் மற்றும் தொழில் குழுக்களுக்கு, துவக்க நிதி மானியமாக தலா ரூ.75 ஆயிரம் வீதம் ரூ.23 லட்சத்து 25 ஆயிரம் மானியத்தொகையினை வழங்கினார்.

மேலும் ஏற்றம் உழவர் உற்பத்தியாளர் கம்பெனி லிமிடெட் மற்றும் மாஞ்சோலை உழவர் உற்பத்தியாளர் கம்பெனி லிமிடெட் ஆகிய புதிய இரண்டு உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு சான்றிதழை வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, பர்கூர் மற்றும் காவேரிப்பட்டணம் ஆகிய ஒன்றியங்களில் உலக வங்கி நிதியுதவியுடன், ஊரக வளாச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம் உற்பத்தியாளர் குழுக்கள் மற்றும் தொழில் குழுக்கள் துவங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இவை தொடர்ந்து சிறப்பாக செயல்பட அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

இந்நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் சதீஸ்குமார், மாவட்ட செயல் அலுவலர் தமிழ்மாறன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, செயல் அலுவலர்கள் பிரதீப்குமார், ஜெய்குமார், சிவலிங்கம், முத்துகுமார், இளம் வல்லுநர் ஆனந்த், முன்னாள் எம்எல்ஏ., செங்குட்டுவன், நகர்மன்ற தலைவர் பரிதாநவாப், முன்னாள் எம்பி.க்கள் சுகவனம், வெற்றிச்செல்வன், பள்ளியின் தலைமை ஆசிரியர் மகேந்திரன், பிடிஏ தலைவர் நவாப் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img