fbpx
Homeபிற செய்திகள்‘கட்டணமில்லா இலவச பயணத் திட்டம்’ 254 நகரப் பேருந்துகளில் 14 மாதங்களில் 6,85,93,380 பேர் பயணம்

‘கட்டணமில்லா இலவச பயணத் திட்டம்’ 254 நகரப் பேருந்துகளில் 14 மாதங்களில் 6,85,93,380 பேர் பயணம்

திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து மகளிருக்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பயண வசதி திட்டத்தின் கீழ் கடந்த ஜூலை 2021 முதல் செப்டம்பர் 2022 வரை 6,85,93,380 பேர் பயணம் செய்துள்ளனர்.


தமிழக முதல்வராக மு.க.ஸ்டா லின் பதவியேற்றவுடன், மக்களின் வாழ்வில் புது ஒளியை ஏற்படுத்தும் வகையில் 5 முக்கிய அரசாணைகளைப் பிறப்பித்தார். அவை தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள வாக்குறுதிகளை நிறைவவேற்றும் வகையிலும், கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்ள பொது மக்களுக்கு உதவும் வகையிலும் அமைந்திருந்தன.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் எஸ்.வினீத் தெரிவித்ததாவது:


தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகக் கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் பணிபுரியும் மகளிர், உயர்கல்வி பயிலும் மாணவியர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணமில்லாமலும், பேருந்து பயண அட்டை இல்லாமலும் பயணம் செய்ய முதல்வர் தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் பணிமனை 1-ல் 43 நகரப் பேருந்துகளும், பணிமனை 2-ல் 27 நகரப் பேருந்துகளும், பல்லடம் பணிமனையில் 51 நகரப் பேருந்துகளும், காங்கேயம் பணிமனையில் 45 நகரப் பேருந்துகளும், தாராபும் பணிமனையில் 31 நகரப் பேருந்துகளும், உடுமலை பணிமனையில் 57 நகரப் பேருந்துகள் என மொத்தம் 254 நகரப் பேருந்துகள் இயங்குகின்றன.

பணிபுரியும் மகளிர் மற்றும் உயர்கல்வி பயிலும் மாணவியர் உள்ளிட்ட அனைத்து மகளிருக் கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பயண வசதி திட்டத்தின் கீழ் கடந்த ஜூலை 2021 முதல் செப்டம்பர் 2022 வரை 6,85,93,380 பேர் பயணம் செய்துள்ளனர்.

அதில் திருப்பூர் மாவட்ட பணிமனையின் கீழ் இயங்கும் 254 நகரப் பேருந்துகளில் 6,81,59,815 மகளிர், 3,69,502 மாற்றுத்திறனாளிகள், 25,877 மாற்றுத்திறனாளிகளின் உதவியா ளர்களும், 38,186 மூன்றாம் பாலினத்தவர்களும் பயணம் செய்துள்ளார்கள்.

பெண்களின் வேலை பங்கேற்பு விகிதத்தை அதிகரிப்பது பொருளாதாரத்தின் வளர்ச்சியை மேம்படுத்தும். பெண்களுக்கு அவர்களின் உயர் கல்வித் தேவைகளை எளிதாக்குவதற்கும் பொருளாதார ரீதியாக பங்களிப்பதற்கும் மற்றும் பொதுப் போக்குவரத்தில் பாதுகாப்பான பயணங்கள் வழங்கப்படும்

இது அவர்களின் சமூக பொருளாதார நிலை மற்றும் பொருளாதாரத்தின் வளர்ச்சியை மேம்படுத்தும் ஒரு சிறந்த திட்டமாகும்.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் டாக்டர் எஸ்.வினீத் தெரிவித்தார்.

“செலவு குறைந்தது, வருமானத்துக்கு உதவியது”
திருப்பூர் மங்கலம் செட்டிப்பாளையத்தைச் சேர்ந்த அமுதவள்ளி தெரிவித்ததாவது:
திருப்பூரில் தனியார் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறேன். வீட்டில் இருந்து நிறுவனத்துக்குச் சென்றுவர நாள் ஒன்றுக்கு ரூ.50 வரை செலவாகும்.

மிகவும் ஏழ்மையில், வாடகை வீட்டில் வசித்து வருகிறேன்.
வீட்டு வாடகை, மளிகைச் செலவு மற்றும் பால் இவற்றின் செலவின் மூலம் கடும் நிதி நெருக்கடியில் இருந்து வந்தேன்.

முதல்வர் அறிவித்த இலவச பேருந்து பயணத் திட்டத்தின் கீழ் வீட்டில் இருந்து வேலைக்கு நகரப் பேருந்தில் கட்டணமில்லாமல் பயணிக்கிறேன். இதனால் என் வருமானம் சேமிக்கப்பட்டு மாதம் ரூ.1500 வரை சேமிக்கிறேன்.

இது குடும்பச் செலவிற்கு பயன்படுகிறது. அத்தியாவசியத் தேவையை பூர்த்தி செய்ய முடிகிறது. ஏழைப் பெண்களுக்கு உதவும் இத்திட்டத்தைத் தந்த முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றி என்றார்.

“எனக்கும் மகள்களுக்கும் சேமிப்பு”
ஊத்துக்குளி பகுதியில் வசிக்கும் செல்வி தெரிவித்த தாவது:
பல்பொருள் அங்காடியில் தினக்கூலியாக வேலை செய்து வருகிறேன். என் வீட்டில் இருந்து நிறுவனத்திற்கு சென்று வர நாள் ஒன்றுக்கு ரூ.40 வரை செலவாகும். எனக்கு 2 மகள்கள் உள்ளனர்.

முதல்வர் அறிவித்த இலவச பயணத் திட்டத்தால், தினமும் நானும், என் மகள்களும், நகரப் பேருந்தில் கட்டணமில்லாமல் சென்று வருகிறோம் இதனால் குடும்ப வருமானம் சேமிக்கப்பட்டு, வேறு செலவுக்கு பயன்படுகிறது.

இத்திட்டம் பெண்களின் சமூக – பொருளாதார நிலை மற்றும் பொருளாதாரத்தின் வளர்ச்சியை மேம்படுத்தும் சிறப்பு திட்டமாகும். இத் திட்டத்தினை செயல்படுத்திய முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றி என்றார்.

தொகுப்பு:
செ.கு.சதீஸ்குமார்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
திருப்பூர் மாவட்டம்.

படிக்க வேண்டும்

spot_img