fbpx
Homeபிற செய்திகள்கங்கா மருத்துவமனையில் ஹோப் ஆப்டர் மைல்கல் விழா

கங்கா மருத்துவமனையில் ஹோப் ஆப்டர் மைல்கல் விழா

ஹோப் ஆப்டர் மைல்கல் விழாவை ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் மெட்ரோபாலிஸ், கங்கா ஹாஸ்பிடல், ரோட்டரி பவுண்டேஷன் ஆகியவை இணைந்து கடந்த 10 ஆண்டுகளாக நடத்தி வருகிறது.

தீக்காயம் பெற்ற 640 பேர், தீக்காய சிதைவுகளுக்கு அறுவை சிகிச்சை பெற்ற 1069 பேருக்கு ரூ.6.92 கோடி செலவில் சிகிச்சை தரப்பட்டுள்ளது. இந்த கால நிலையை நினைவு கூரும் விதமாக கடந்த 5-ம் தேதி கங்கா மருத்துவமனையில் விழா நடந்தது.

ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் மெட்ரோபாலிஸ் தலைவர் கே.பழனியப்பன், ரோட்டரி இண்டர் நேஷனல் வெங்கடேஷ், வட்டார கவர்னர் எஸ்.ராஜசேகர், சேர்மன் மற்றும் மேனேஜிங் டைரக்டர் மில்கி மிஸ்ட் டைரி புட் லிட்., சதிஷ்குமார், புராஜெக்ட் தலைமை கங்கா மருத்துவமனை டாக்டர் எஸ்.ராஜசபாபதி, ரோட்டரி இண் டர்நேஷனல் தலைவர் சேகர் மேத்தா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இந்தியா முழுவதும் உள்ள அனைத்து ரோட்டரி கிளப்களும் இந்த திட்டத்தினை தெரிவித்து, அவ்வாறு தீக்காயமுற்றவர்களுக்கு மறுவாழ்வு அளித்து மருத்துவம் செய்ய தயாராக இருப்பதாக ரோட்டரி கோயமுத்தூர் மெட்ரோபாலிஸ் கிளப் தெரிவித்துள்ளது.

படிக்க வேண்டும்

spot_img