fbpx
Homeதலையங்கம்ஒரு எருமைக்கன்றுக்கு உரிமை கோரும் இருவர்!

ஒரு எருமைக்கன்றுக்கு உரிமை கோரும் இருவர்!

ஒரு எருமைக்கன்றுக்கு உரிமை கோரும் இருவர் நீதிமன்றத்தை நாடி உள்ளனர். உத்திரப்பிரதேச மாநிலம் மேற்கு மாவட்டம் சாம்லி அகமது கிராமத்தில் வசிப்பவர் சந்திரபால்.

இவரது எருமைகளில் ஒன்று ஈன்ற கன்றுக்குட்டி ஆகஸ்டு 25ம் தேதி காணாமல் போனது. அடுத்த மூன்று மாதங்களில் தனது எருமைக்கன்று அருகில் உள்ள பீன்பூர் கிராமத்தில் சத்வீர் என்பவரிடம் இருப்பதாக தெரியவந்தது.

இதையடுத்து சந்திரபால் நேரில் சென்று கேட்டபோது அவர் மறுத்துள்ளார். இதனால் சந்திரபால் தனது எருமைக்கன்றை மீட்க சட்டப்போராட்டத்தை தொடங்கி உள்ளார்.

இதற்காக பீன்பூர் கிராமப் பஞ்சாயத்து காவல்நிலையம் ஆகியவற்றில் புகார் செய்தும் பலன் இல்லை. பிறகு மாவட்ட எஸ்பியிடம் புகார் செய்துள்ளார். மேலும் முதல்வர் யோகிக்கு அனுப்பிய புகாரின் நகலையும் அளித்துள்ளார்.

இதையடுத்து எஸ்பி சுக்ரிபி டிஎன்ஏ சோதனை செய்து உண்மையை கண்டறியுமாறு சாம்லி மாவட்ட அரசு கால்நடை மருத்துவ அதிகாரியிடம் கோரி உள்ளார்.

இந்த உத்தவின்படி பீன்பூர் வந்த கால்நடை மருத்துவர்கள் டிஎன்ஏ சோதனைக்காக சாம்பிளை எருமைக்கன்றிடம் எடுத்துச் சென்றுள்ளனர்.

இதை சந்திரபாலிடம் உள்ள தாய் எருமையின் டிஎன்ஏவுடன் பொருத்திப் பார்த்து உண்மை அறியப்பட உள்ளது. இதில் வெளியாகும் முடிவின்படி வழக்குப்பதிவு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

நாட்டிலேயே முதல்முறையாக வெளியாகியுள்ள இந்த விநோத வழக்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

படிக்க வேண்டும்

spot_img