இந்திய இரைப்பை குடல் எண்டோஸ்கோபி அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் 20 வது ஆண்டு கருத்தரங்கம் கோவையில் துவங்கியது.
இந்திய இரைப்பை குடல் எண்டோஸ்கோபி அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் (IAGES) கடந்த 1993 ஆம் துவங்கப்பட்டு,இந்தியா மட்டுமின்றி, பாகிஸ்தான் பங்களாதேஷ் நேபாள் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த மருத்துவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்நிலையில் இரைப்பை குடல் தொடர்பான சிகிச்சையில் ,பல்வேறு நவீன தொழில் நுட்பங்கள் மற்றும் அது தொடர்பான ஆய்வு கட்டுரைகள் குறித்த கருத்தரங்கம் கோவை கொடிசியா அரங்கில் நடைபெற்றது. மூன்று நாட்கள் நடைபெற உள்ள இதற்கான துவக்க விழா கொடிசியா உள் அரங்கில் நடைபெற்றது.
அஸ்வின் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் எல்.பி.தங்கவேலு தலைமையில் நடைபெற்ற இதில், மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் அஸ்வின் முன்னிலை வகித்தார்.
ஐ.ஏ.ஜி.இ.எஸ்.யின் இருபதாவது தேசிய அளவிலான கருத்தரங்கமாக நடைபெற்ற இதில், பல்வேறு நாடுகளை சேர்ந்த, இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இளம் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் இந்தியா மற்றும் அண்டை நாடுகளிலிருந்தும் கலந்து கொண்டனர்..குடல் இரைப்பை அறுவை சிகிச்சையில், அனுபவம் மற்றும் புகழ்மிக்க அறுவை சிகிச்சை பேராசிரியர்கள் நிபுணர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
குறிப்பாக இரைப்பை குடல் அறுவை சிகிச்சையில் தற்போது உள்ள நவீன தொழில்நுட்பங்கள் அறுவை சிகிச்சைகள் குறித்து இளம் நிபுணர்களுக்கு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு அது குறித்த விளக்கம் அளிக்கப்பட்டது.கருத்தரங்கு துவக்க விழாவில் தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் பேராசிரியர் கங்காதர் கே எம் சி எச் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் நல்ல பழனிசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.