fbpx
Homeதலையங்கம்ஐடி நிறுவனங்களில் காத்திருக்கும் வேலைகள்!

ஐடி நிறுவனங்களில் காத்திருக்கும் வேலைகள்!

இந்தியாவில் அதிவேகமாக வளர்ந்து வரும் துறைகளில் தொழில்நுட்பத் துறையும் ஒன்று. இந்தியாவின் பொருளாதாரத்துக்கு இந்திய தொழில்நுட்பத் துறை கணிசமான அளவில் பங்களித்து வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

கல்லூரி படிப்பு முடித்த உடனே அல்லது இறுதி ஆண்டில் இருக்கும் பொழுதே வேலைக்கான ஆர்டரை இந்திய ஐ.டி. நிறுவனங்கள் வழங்குகின்றன. அது மட்டுமின்றி, பல்வேறு புதிய துறைகள் ஐடி சேவைகளை சார்ந்து இயங்குகின்றன.

இந்தியாவில் ஐடி சேவை நிறுவனங்கள், இந்த நிதியாண்டில் மட்டுமே 5,00,000 க்கும் அதிகமான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, இந்த நிதியாண்டிற்கான வளர்ச்சி இரட்டிப்பாகி உள்ளது.

இந்தியாவின் ஐடி ஜாம்பவான்கள் என்று கூறப்படும் டிசிஎஸ், விப்ரோ, இன்ஃபோசிஸ், ஹெச்சிஎல், டெக் மகிந்த்ரா மற்றும் மைன்ட் ட்ரீ ஆகிய நிறுவனங்களில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன.

இதைத் தொடர்ந்து வேறு சில பன்னாட்டு நிறுவனங்களான அசென்ஜர், கேப்ஜெமினி, ஐபிஎம், ஆரக்கிள் உள்ளிட்ட நிறுவனங்களிலும் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன. இந்த ஆண்டு உருவாக்கப்பட்ட புதிய வேலைவாய்ப்புகளில் 90% இந்த நிறுவனங்களில் இருந்துதான் வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் பல நிறுவனங்களும் டிஜிட்டலுக்கு மாறியுள்ளன. பெரும்பாலான சேவைகளை ஆன்லைனில் பெறும் அளவுக்கு தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்தி உள்ளது.

பெரும்பாலான புதிய வேலைகள் அனைத்துமே கல்லூரி படிப்பு முடித்து அனுபவமில்லாத பிரஷ்ஷர்களுக்கு வேலை கிடைக்கும் வகையில்தான் அமைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், பல ஆயிரம் புதிய வேலைகள் உருவாகலாம். இந்த வேலைவாய்ப்புகளை தவறவிடாமல் பெற்றிடும் முயற்சியில் இளைஞர்கள் முனைப்பு காட்ட வேண்டும்.
இளைஞர்களே, ஐடி நிறுவனங்களின் கதவுகளைத் தட்டிப் பாருங்கள். கதவும் திறக்கும்; வேலையும் கிடைக்கும்!

படிக்க வேண்டும்

spot_img