Homeபிற செய்திகள்எஸ்எஸ்விஎம் கல்வி நிறுவனங்கள் சார்பில் ‘டெடெக்ஸ்’

எஸ்எஸ்விஎம் கல்வி நிறுவனங்கள் சார்பில் ‘டெடெக்ஸ்’

கோவை எஸ்எஸ்விஎம் கல்வி நிறுவனங்கள், எஸ்எஸ்விஎம் வேர்ல்டு ஸ்கூல் சார்பில் கோவை பள்ளிகளில் முதன் முறை யாக சர்வதேச நிகழ்வான ‘டெடெக்ஸ்’ நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தன.

டெட் என்பது தொழில் நுட்பம், பொழுதுபோக்கு மற்றும் வடிவமைப்பு ஆகி யவற்றைக் குறிக்கிறது. இது பகிர்ந்து கொள்ளத் தகுந்த கருத்துக்களைப் பரப்பும் யோசனையுடன் நிறுவப்பட்ட ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாகும்.
டெடெக்ஸ் என்பது ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட டெட் நிகழ்வு.

எஸ்எஸ் விஎம்-ல் உள்ள டெடெக்ஸ், பேச்சாளர்களுக்கும் பங்கேற்பாளர்களுக்கும் குரல் கொடுப்பதற்கான ஒரு வாய்ப்பை இந்த நிகழ்வு வழங்கியது.

டெடெக்ஸர் மற்றும் ஓய்வு பெற்ற ஐஎஃப்எஸ் அதிகாரியுமான ஸ்ரீனி வாசன், நிகழ்ச்சியை துவக்கி வைத்து “ஒரு நல்ல நெருக்கடியை வீணாக் காதே” என்ற தலைப்பில் பேசியதாவது

நாடுகளுக்கிடையில் நெருக்கடி என்பது மனித குலத்துக்கான சவால் தான். நெருக்க டிகள் வரும்போது, அவற்றை வளர்ச்சிக்கான வாய்ப்பா கப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதுதான் இதுவரை வரலாற்றில் நடந்தும் இருக்கிறது.

இர ண்டாம் உலகப் போர், சோவியத் கூட்டமைப்பு நாடுகளின் துண்டாடல், 2001-ல் தொடங்கி பத் தாண்டுகளுக்கும் மேலாக நீடித்த பொருளாதார முடக்கம், அணு ஆயுதங் களின் ஆபத்து, அமெரிக்க இரட்டை கோபுரங்கள் தாக்குதல், சமீபத்தில் கோவிட் தீங்குப் பரவல் எல்லாமுமே உலகுக்கு நேர்ந்த கடும் நெருக்கடிகள் தான்.

தற்போது ரஷ்யா -உக்ரைன் இடையே வல்லாதிக்கப் போர். இந்த நெருக்கடிகள் எல்லாமே, ஒட்டு மொத்த மனித குலத்துக்கான சவாலாக அமைந்து விட்ட போதி லும், இவற்றிலிருந்தே வளர்ச்சிக்கான வாய்ப்பை யும் பெறமுடிகிறது.

இந் தியா ரஷ்யாவுக்கு ஆதரவு தெரிவிப்பது என்பது கூட, உலக நலன் பாதுகாப்பின் பொருட்டுத்தான். மனித னின் மனசாட்சியும், நம் பிக்கையுமே இதனைச் சாதிக்கும் என ஐ.நா. கூறு கிறது.

வல்லரசுகளுக்கான போட்டி, பொருளாதார அதிகாரத்தின் அடிப்படை யில் செயல்படும் இன் றைய நிலையில், உலக சமாதானத்திற்கான வலு வான முயற்சியில் ஐ.நா. ஈடுபடுகிறது. நாடுகளின் தனிப்பட்ட நலன்களை விட, ஒட்டு மொத்த மானுட இனத்தின் ஒற்று மையும், பாதுகாப்பும், நலனுமே முக்கியம் என் றார்.

கௌரவ விருந்தினர் கள் ப்ரீத்தி ஸ்ரீனிவாசன், சுவாமி லலிதானந்தா ஆகி யோர் பேசினர். எஸ்எஸ்விஎம் பள்ளி நிர்வாக அறங்காவலர் டாக்டர் மணிமேகலை மோகன், நிர்வாகச் செயல £ளர் மோகன்தாஸ், நிர் வாக இயக்குனர் நிதின் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img