fbpx
Homeபிற செய்திகள்கோவையில் ‘கொஹிரன்ட் பிக்ஸெல்ஸ்’ துவக்கம்

கோவையில் ‘கொஹிரன்ட் பிக்ஸெல்ஸ்’ துவக்கம்

கொஹிரன்ட் பிக் ஸெல்ஸ் பிரைவேட் லிமிடெட், உலகளவில் தகவல் தொழில்நுட்ப சேவைகளை அளிக்கும் நிறுவனங்களில் மிக வே மாக வளர்ச்சி கண்டு வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த நிறுவனமாகும்.

கோவையில் இந்நிறுவ னம் சரவணம்பட்டியில், 159, சத்திரோடு, ராகம் டவர்ஸ் என்ற முகவரியில் தனது புதிய அலுவலகத்தை தொடங்கியுள்ளது.

எந்தவொரு தொழில் நிறுவனமாக இருந்தாலும் அவற்றின் அத்தியாவசிய செயல்பாட்டுக்கான அம்சங்களை எளிதில் மேற்கொள்ளும் வகையி லான மென் பொருள்களை உருவாக்கி கொடுப்பது, மொபைல் போன்களில் பயன்படுத்தும் அப்ளி கேஷன் எனப்படும் செய லிகளை உருவாக்குவது, நிறுவனங்களின் தயாரிப்பு கள் சரியான முறையில் தீர்வுகளைக் கொடுக்கிறதா என்பதை கண்டறியும் டெஸ்ட் ஆட்டோமேஷன் மற்றும் அதிநவீன ரோ« பாட்டிக் ப்ராசஸ் ஆட் டோமேஷன் மற்றும் சப் போர்ட் இவற்றுடன் இந் நிறுவனத்தின் அனைத்து வாடிக்கையாளர்களின் டிஜிட்டல் தொழில்நுட்ப பயன்பாடுகளுக்கு பல் வேறு தளங்களிலான அதிநவீன தீர்வுகளை கொஹிரன்ட் பிக்ஸெல்ஸ் சிஸ்டம் வழங்குகிறது.

கோவையில் ஆரம்பமா கும் புதிய அலுவலகத்தின் துவக்க நிகழ்ச்சியில் கொஹிரன்ட் பிக்ஸெல்ஸ் சிஸ்டம்ஸ் நிறுவனர் மற்றும் இயக்குனர் வி. அருண்குமார் கோபிநாத் பேசுகையில், “கொஹிரன்ட் பிக்ஸெல்ஸ் சிஸ்டம்ஸ் என்பது ஒரு குடும்பம்.

குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் இது ஒரு பெருமைமிக்க தருணம். இந்த நிறுவனத்தை நாங்கள் 2017-ம் ஆண்டில் 3 பேருடன் துவக்கினோம்.
தற்போது 100-க்கும் மேற்பட்ட பணி யாளர்களைக் கொண்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பன்னாட்டு நிறுவனமாக வளர்ச்சி பெற்றிருக்கிறது.

அமெரிக்கா, சிங்கப்பூர் இந்தியாவில் 30-க்கும் மேற் பட்ட நிறுவனங் களை தங்களது வாடிக்கையாளர் களைக் கொண்டுள்ள, கொஹிரன்ட் பிக்ஸெல்ஸ் நிறுவனம், இதுவரையில் 100-க்கும் மேற்பட்ட ப்ரா ஜெக்ட்களை வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளது.

கோவையில் ஆரம்பமாகி இருக்கும் அலுவலகம் எங்களது செயல்பாடுகளை விரிவுபடுத்தும், முயற் சியின் அடுத்த கட்டமாக அமைந்திருக்கிறது. பெயர் பெற்ற கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் அதிகமிருக்கும் கோவை யில், பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க திறன்வாய்ந் தவர்கள் அதிகம் உள்ள னர்.

இதன் மூலம் எங்க ளது நிறுவனத்தின் பணியாளர்களின் எண்ணிக் கையை, எதிர்கால தேவை களுக்கேற்ப உயர்த்தவும், செயல்பாடுகளை மேலும் விரிவுபடுத்தவும் உள்ளூர் திறமைசாலிகளுக்கு வேலைவாய்ப்பை உரு வாக்கி தரவும் ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள் ளது,” என்றார்.

படிக்க வேண்டும்

spot_img