fbpx
Homeபிற செய்திகள்எம்.ஜி.ஆர் நினைவு தினநிகழ்ச்சி

எம்.ஜி.ஆர் நினைவு தினநிகழ்ச்சி

பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்துள்ள வீரபாண்டியில் எம். ஜி.ஆரின் நினைவுதின நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடந்தது.

வீரபாண்டி பேரூராட்சிக்குட்பட்ட எம்.ஜி.ஆர் நகரில் நடந்த இதற்கு வீரபாண்டி பேரூ ராட்சியின் முன்னாள் தலைவரும், பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளருமான கே.வி. என்.ஜெயராமன் தலைமை வகித்தார்.
நகரச் செயலாளர் ராமதாஸ் முன்னிலை வகித்தார்.

கோவை புறந கர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், கவுண்டம்பாளையம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான பி.ஆர்.ஜி. அருண்குமார்,மேட்டுப்பாளையம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆரின் திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி அன்னதானத்தைத் தொடக்கி வைத்தனர்.

இதில் நூற்றுக்கணக்கான பொதும க்கள் கலந்து கொண்டு உணவருந்தினர். இதற்கான ஏற்பாடுகளை வீரபாண்டி அதிமுக நகர நிர்வாகிகள் செய்திருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img