ஊட்டியில் உள்ள ஜே.எஸ் எஸ். பார்மசி கல்லூரியில் எதிர்கால மருந்துகள் ஆராய்ச் சியில் ஏற்படும் மாற்றங்கள் என்ற தலைப்பில் இரண்டுநாள் தேசிய அளவிலான கருத்த ரங்கு நேற்று துவங்கியது. இன்று நிறைவடைகிறது.
ஜே.எஸ். எஸ். கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.பி. தனபால் வரவேற்றார்.
மருந்தாக்கியல் துறைத் தலைவர் முனைவர் கே.கௌதமராஜன், கருத்தரங்கம் உருவானவி தம் மற்றும் அதன் முக்கி யத்துவத்தை விளக்கினார்.
டாக்டர் மோனிகா ஜேஎஸ்எஸ் கல்லூரிக்கும் பஞ்சாப் லவ்லி பல்கலைக்கழகம் இடையேயான ஆராய்ச்சி ஒத்துழைப்பு குறித்து உரையாற்றினார்.
மெடோபார்ம் பிரைவேட் லிமிடெட் தலைமை அதிகாரி, ஆர் சபாபதி இதுபோன்ற ஆராய்ச்சி ஒத்துழைப்பின் அவசியம் குறித்து பேசினார்.
ஜே.எஸ்.எஸ். ஆராய்ச்சி மற்றும் உயர் கல்வி குழுமத்தின் துணைத்தேர்வுக் கட்டுப்பாட்டாளர் டாக்டர் மதுசூதன் புரோகித், இளைய ஆராச்சியாளர்களிடம் இது போன்ற கருத்தரங்கின் முக்கி யத்துவம் குறித்தும் தற்போது ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் அறிவினை மேம்படுத்தல் முக்கியத்துவத்தையும் விளக்கினார்.
இந்திய காப்புரிமை அலுவலகம், ஐஐடி மெட் ராஸ், அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் -மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் போன்ற அரசு தொழில்துறை மற்றும் கல்வி நிறுவனங்களில் இருந்து பங்கேற்ற தலைசிறந்த ஆராய்ச்சியாளர்களும் நானோ தொழில்நுட்பம், ஆய்வகத்திலிருந்து வணிகமயமாக்கல், தனிப்பயனாக்கப்பட்ட மருத்துவம், அறிவுசார் சொத்துரிமை பெறுதல், மருந்து ஆராய்ச்சி நிறுவனத்துக்கும் உள்ள இடைவெளியை பூர்த்தி செய்வ தில் உள்ள இன்றைய நிலை குறித்து அவர்களது ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகள் குறித்து எடுத்துரைத்தனர்.
முப்பரிமாண தொழில்நுட்பத்தின் , மருத்துவ மற்றும் மருந்து உற்பத்தி துறையில் பங்கினை விளக்கும் வகையில் செயல்முறை விளக்கமும் வழங்கப்பட்டது.
பஞ்சாப் லவ்லி பல்கலைக் கழக பேராசிரியர் முனைவர் டாக்டர் சச்சின் குமார் சிங் நன்றி கூறினார். மருந்தாக்கியல் துறை கல்லூரி ஆசிரியர்கள் அனைவரும் இணைந்து கருத்தரங்கு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.