Homeபிற செய்திகள்எதிர்காலத்தை தீர்மானிக்கும் கல்லூரி படிப்பு மாணவர்களுக்கு முன்னாள் டி.ஜி.பி. அறிவுரை

எதிர்காலத்தை தீர்மானிக்கும் கல்லூரி படிப்பு மாணவர்களுக்கு முன்னாள் டி.ஜி.பி. அறிவுரை

கல்லூரியில் படிக்கும் 3 ஆண்டுகள் தான் எதிர்காலத்தை தீர் மானிக்கும். இந்த காலத்தில் உங்களுடைய திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று மாணவர்களுக்கு முன்னாள் டி.ஜி.பி. கே.ராதாகிருஷ்ணன் அறிவுரை வழங்கினார்.

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் 35-வது ஆண்டு விழா, நேற்று (ஜூன் 7) கொண்டாடப்பட்டது.

எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட் டளை நிர்வாக அறங்காவலர் டி.லட்சுமி நாராயணசுவாமி விழாவு க்குத் தலைமை வகித்து பேசினார். கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல். சிவக்குமார் கல்லூரியின் சாதனை களைப் பட்டியலிட்டு ஆண்டறிக்கை வாசித்தார்.

தமிழக முன்னாள் காவல் துறை இயக்குநர் மற்றும் 5-வது காவல் ஆணைய உறுப்பின ருமான முனைவர் கே. ராதாகிருஷ்ணனுக்கு, கடந்த 25 ஆண்டுகளாக கோவை உள் ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை அமைதிப் பூங்காவாக பாதுகாத்தமைக்காக, கல்லூரியின் சார்பில் “உலக அமைதி தூதுவர்” விருதை எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளை நிர் வாக அறங்காவலர் டி.லட்சுமி நாராயணசுவாமி வழங்கி கௌர வித்தார்.

பின்னர் கே.ராதா கிருஷ் ணன் பேசும் போது, தனி மனிதனும், சமுதாயமும் வெவ் வேறல்ல. இரண்டும் ஒன்றையொன்று சார்ந்தது. ஒவ்வொரு தனி மனிதனும் சமுதாயத்தைச் சார்ந் திருக்கிறான். சமுதாயமும் தனி மனிதனைச் சார்ந்தி ருக்கிறது.

என வே, மாணவர்கள் தகவல் தொடர்பு அறிவு, பொது அறிவு, தனித் திறமை, வாழ்வியல் திறன் கள் போன்றவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும். உங்களுடைய எதிர்காலத்தை கல்லூரியில் படிக்கும் 3 ஆண்டுகள் தான் தீர்மானிக்கும். இந்த காலத்தில் உங்களுடைய திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

காற்று உள்ளபோதே தூற்றிக் கொள்ள வேண்டும் என்பது போல, கல்லூரி காலத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உங்களுடைய சுய முன்னேற்றத்திற்காக அதிக நேரத்தைச் செலவிட வேண்டும்.

ஸ்ரீராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் படிக்க வாய்ப்பு கிடைத்த மாணவர்களான நீங்கள் அதிர்ஷ்டசாலிகள். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற்றம் அடையுங்கள் என்று குறிப்பிட்டார்.

பாரதியார் பல்கலைக் கழக அண்ணா ஐ.ஏ.எஸ்.அகாடமி இயக்குநர் முனைவர் எம்.பத்மநாபன் பேசினார். கல்வியில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவிகள், நாட்டுநலப் பணித்திட்டம், தேசிய மாணவர்படை மற்றும் கலாச்சார கலைகளில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு விருது மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்த ஆண்டு பாரதியார் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற இக்கல்லூரியில் பணிய £ற்றும் பேராசிரியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

படிக்க வேண்டும்

spot_img